நகை பறிக்க முயன்றவர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவலர்களுக்குப் பாராட்டுகள்.

நகை பறிக்க முயன்றவர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவலர்களுக்குப் பாராட்டுகள்.

டந்து சென்றவரிடம் நகை பறித்து ஓடி மறைந்த காலம் அன்று. இரு சக்கர வாகனத்தில் வந்து நகை பறித்து விட்டுத் தப்பிக்கும் காலம் இன்று. ஆனால் இதுவும் முன்னேறி காரில் சென்றும் நகை பறிக்கலாம் என்று முயற்சித்து அத்திட்டம் தோல்வியில் முடிந்து காவலர் களிடம் மாட்டிய இளைஞர்கள். இதில் சிறப்பாக செயல்பட்ட  காவலர்களுக்கு பாராட்டுகளை தந்துள்ளனர் மக்கள்.
       கோவை பீளமேடு காலனி சேர்ந்தவர் ராஜ்குமார் அவரது மனைவி கௌசல்யா. இருவரும் அதிகாலையில் நடைப்பயிற்சி  மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம்  கணவர் ராஜ்குமார் உடன் வராததால் கௌசல்யா மட்டும் தனியாக நடைப்பயிற்சிக்கு வந்து ஜி வி ரெசிடென்சி பகுதியில் தனியாக நடந்து கொண்டிருந்தார். அப்போது வேகமாக அருகில் வந்த காரிலிருந்த  ஒருவன் காரின் முன் பக்க கதவைத் திறந்து கையை வெளியே நீட்டி கௌசல்யா கழுத்தில் இருந்த தங்க நகையை பறிக்க முயன்றுள்ளான். உடனே கௌசல்யா இரு கைகளினாலும் நகையே இறுக்கப் பற்றி பிடித்துக் கொண்டதால் அந்த நபரால் நகையை பறிக்க முடியவில்லை. ஆனால் இந்தப் போராட்டத்தில் கௌசல்யா தடுமாறி கீழே விழுந்தார்.

      உடனே காரில் வந்த நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனுடன் கௌசல்யா அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கௌசல்யாவிடம் நகை பறிக்க முயன்ற இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோவை மாநகர (தெற்கு) போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் கூறியதாவது “தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற  நபர்கள் தாங்கள் பயன்படுத்திய காரின் நம்பர் பிளேட்டை கழற்றி வைத்திருந்தனர். அதனால் இந்த காரை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் ஏராளமான கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அவர்கள் வந்த கார் கோவை மாநகரை விட்டு வெளியே செல்லவில்லை என்று உறுதியாகத் தெரிந்தது. இந்த நிலையில் நேற்று காலை கோவை விமான நிலையம் அருகே ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை அங்கு ரோந்து சென்ற போலீசார் மடக்கி காரில் இருந்த டிரைவர் உள்பட இரண்டு பேரிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ந்த அபிஷேக்குமார் மற்றும் அவரது நண்பர் டிரைவர் சக்திவேல் என்பது தெரிய வந்துள்ளது. இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக கோவை சித்ரா பகுதியில் வசித்து வந்துள்ளனர். சக்திவேல் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஒட்டி வந்துள்ளார். அபிஷேக்குமார் கோவையில் ஒரு நிறுவனத்தில் உணவு விநியோகஸ்தராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சக்திவேலுக்கு பணம் தேவைப்பட்டுள்ளதை தனது நண்பரான அபிஷேக்குமாருடன் தெரிவித்துள்ளார். அபிஷேக்குமார் யாரிடமாவது நகையை பறித்து பணத்தை பூர்த்தி செய்யலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார். இதை அடுத்து இருவரும் நடந்து செல்லும் பெண்களிடம் நகையை பறிக்க திட்டமிட்டனர்.

     அடையாளம் தெரிந்து விடாமல் இருக்க தங்கள் காரின் நம்பர் பிளேட்டை கழட்டி வைத்துள்ளனர். அதன்படி தனியாக வந்த கவுசல்யாவிடம் நகை பறிக்க முயன்று நகையை பறிக்க முடியாமல் போனது தெரிய வந்தது. அபிஷேக்குமார் மீது ஏற்கனவே கோவையில் நகை பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சக்திவேல் மீது வழக்கு ஏதும் இல்லை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது”  என்று கூறினார். சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் சி சி கண்காணிப்பு கேமாரக்களை வைத்து குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை  கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com