குவைத் தீ விபத்து: தமிழக அரசு அறிவித்த தொலைபேசி எண்!

Kuwait Fire Accident
Kuwait Fire Accident
Published on

குவைத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 40 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழக அரசு பலியானவர்களின் விபரங்களை தெரிந்துக்கொள்ள தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

குவைத்தில் செயல்பட்டு வரும் என்.பி.டி.சி. நிறுவனத்தில் இந்தியர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்கள் தங்குவதற்காக குவைத்தின் தெற்குபகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்திற்குட்பட்ட மங்காப்பில் அடுக்குமாடி குடியிருப்பை ஏற்பாடு செய்துள்ளது.

6 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். நேற்றிரவு குடியிருப்பில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகியுள்ளனர். அதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 11 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 2 பேர் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த செய்தியானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
குவைத்தில் கோர தீ விபத்து! நெஞ்சை உருக்கும் சம்பவம்! விபத்துக்குக் காரணம் என்ன?
Kuwait Fire Accident

இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த தகவலை சேகரிக்கும் படி அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விபத்து குறித்த விவரங்களுக்கு இந்தியா: +91 180093793 என்ற எண்ணை தொடர்புக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com