குவைத் தீ விபத்து! இறந்தவர்களின் உடல்கள் இன்று சொந்த ஊர் செல்லும் நிலையில் தொழிலதிபர்கள் நிதி உதவி!

kuwait
kuwait
Published on

குவைத் நாட்டில் மாங்காப் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல தொழிலதிபர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

குவைத் நாட்டில் மங்காப் நகரில் உள்ள ஆறு மாடிக் குடியிருப்பில் கடந்த  புதன்கிழமை காலை 4:30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட 49 பேர் பலியாகிய சம்பவம் தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் ஒரு கோர நிகழ்வு. இதில் உயிரிழந்தவர்களின் 42 பேர் இந்தியர்கள் என குவைத் அரசு உறுதிப்படுத்தியுள்ளது .

இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிக்கிச்சை பெற்று வரும் நிலையில், சிலர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.   

 ஒவ்வொரு குடும்பத்திறக்கும் தலா 5 லட்சம் வழங்கப்படும்

குவைத் தீ விபத்துக் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது  x தளத்தில் "குவைத் தீவிபத்தில் ஏழு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக வந்த செய்தி மிகுந்த வேதனை தருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களைத் தனிவிமானம் மூலம் இந்தியா கொண்டு வந்து, குடும்பத்தினரிடம் விரைவில் ஒப்படைப்பதற்கான ஒருங்கிணைப்புகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். தீக்காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து, தமிழ்நாடு அரசு துணைநின்றிடும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
குவைத்தில் கோர தீ விபத்து! நெஞ்சை உருக்கும் சம்பவம்! விபத்துக்குக் காரணம் என்ன?
kuwait

மேலும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதலமைச்சரின் உத்தரவோடு  கொச்சின் செல்கிறேன். குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் குவைத்திலிருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சின் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து இறந்தவர்களின் உடல்கள் காலை 9 மணிக்கு மேல் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் ஒவ்வொருவரின் சொந்த ஊருக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது என தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கேரள அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் வழங்குவதாகவும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிதியுதவி வழங்குவதாகவும் உத்தரவு தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கேரளாவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்களான யூசுப் அலி 5 லட்சமும் ரவி பிள்ளை 2 லட்சமும் தங்கள் சொந்த நிதியில் இருந்து வழங்குவதாக அறிவித்திருக்கின்றனர். எனவே மொத்தம் 12 லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. அதோடு உள்ளூர் தொழிலத்திபர்களும் நிதி உதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com