ஏற்றுமதி இருமல் மருந்துகளுக்கு லேப் சோதனை கட்டாயம்: மத்திய அரசு கெடுபிடி!

ஏற்றுமதி இருமல் மருந்துகளுக்கு லேப் சோதனை கட்டாயம்: மத்திய அரசு கெடுபிடி!
Published on

ந்தியாவிலிருந்து சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளை அருந்தியதால் காம்பியாவில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் உயிரிழந்தனர். இதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்தது. இந்த நிலையில், இனி இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகள் அரசு ஆய்வுக் கூடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடைமுறை வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

இது சம்பந்தமாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2023 ஜூன் மாதம் 1ம் தேதி முதல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரிகள் அரசு ஆய்வகங்களில் சோதனை செய்யப்படுவது அவசியமாக்கப்படுகிறது. இதுபோன்ற மத்திய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, குவாஹத்தி போன்ற நகரங்களில் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட வேண்டும். மேலும், இதுபோன்று சோதனைக்கு வரும் ஏற்றுமதி இருமல் மருந்துகளை முறையாக மத்திய அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்களா என்பதை அந்தந்த மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தின், ‘குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் லிமிடெட்’ என்ற நிறுவனம், அமெரிக்காவில் தனது தயாரிப்புகளைப் பயன்படுத்தியோருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து மருந்துகளையும் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்தே, ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளின் தரம் குறித்து தீவிர கண்காணிப்பை மத்திய மேற்கொள்ள இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com