96 வயதினிலே… சூப்பராக பரதநாட்டியம் ஆடிய மூதாட்டி! யார் தெரியுமா?

Bharathanatyam
Bharathanatyam
Published on

 நமக்கு பிடித்ததை செய்ய வயது தடை இல்லை என்று கூறுவார்கள். இந்த வாக்கியத்திற்கு ஏற்ப ஒரு 96 வயது மூதாட்டி பரதநாட்டியம் ஆடிய வீடியோதான் பார்ப்போரை வாய்ப்பிழக்க வைத்திருக்கிறது.

சாதிப்பதற்கு வயதில்லை என்ற பொன்மொழிக்கு அவ்வப்போது உலகம் முழுவதும் எதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்துக்கொண்டுதான் வருகிறது. சிலர் எவ்வளவு வயதானாலும், மனதின் திடத்துடன் படிப்பிலும், வேலையிலும் சாதித்து வருகின்றனர்.

அப்படி சாதிப்பவர்களே உலக மக்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்கள். ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டால், இளமை முதுமை என்ற வயதெல்லாம் இல்லை. எப்போது நினைத்தாலும், எதை வேண்டுமென்றாலும் சாதிக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக பல செய்திகளைப் பார்க்க முடிகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றார் ஒரு 81 வயதான மூதாட்டி. அவர் சென்ற ஆண்டு தனது 105 வயதில்  ஸ்டேன்போர்ட் பல்கலைகழகத்தில் தனது படிப்பை முடித்து பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டார். இரண்டாம் உலகப்போரினால் நின்றுப்போன தனது படிப்பை சென்ற ஆண்டுதான் முடித்தார்.

இலங்கையை சேர்ந்த லீலாவதி பாட்டி பற்றி பலருக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது. தனது 97 வயதில் பாலி மற்றும் பௌதத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

இப்படி பல செய்திகள் வருகின்றன. அதேபோல்தான் இப்போது ஒரு செய்தி வந்திருக்கிறது.

சென்னை தாளம்பூரில் அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் 96 வயதுடைய மூதாட்டி பரதநாட்டியம் ஆடி அசத்தியுள்ளார். 96 வயதிலும் பாட்டி பரதநாட்டியம் ஆடுவதால் மக்கள் வியந்து பார்த்தனர். இந்த வீடியோ வெளியிடப்பட்டது. இவர் வேறு யாரும் இல்லை. பழம்பெரும் நடன கலைஞர் லலிதா பாட்டி ஆவார். தனது இளம் வயது முதல் இப்போதுவரை தனக்கு பிடித்த நடனத்தை விடாமல் ஆடி வருகிறார்.

 கிட்டத்தட்ட 60 தமிழ்ப் படங்களில் நடனமாடியிருக்கிறார். 18 வயதில் திரையுலகில் அறிமுகமான இவர், பலருக்கு ஒரு உதாரனமாக இருந்து வருகிறார்.

சாதிப்பதற்கும் தனக்கு பிடித்ததை செய்வதற்கும் வயது ஒரு தடையே இல்லை என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
கமகம வாசனையுடன் புனுகுலுவும், ருசியில் அசத்தும் கொத்து கத்திரிக்காய் கிரேவியும்!
Bharathanatyam

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com