
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு
வேளாண்மையை மட்டுமே நம்பி வாழும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் வாழ்க்கை, பெரும்பாலும் பயிர் சாகுபடி காலங்களில் கிடைக்கும் வேலைகளைப் பொறுத்தே அமைகிறது.
எதிர்பாராத இயற்கை பேரிடர்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களால் பயிர் சாகுபடி பாதிக்கப்படும் போது, உழவர்களைப் போலவே இவர்களது வாழ்வாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.
இந்த நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் குடும்ப நலன் உறுதி செய்ய, அரசு சில நிதி உதவிகளை உயர்த்தி அறிவித்துள்ளது.
திட்டத்தின் நோக்கம்
இந்த நிதியுதவி உயர்வுகள், கிராமப்புறங்களில் உள்ள நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதோடு, எதிர்பாராத நிகழ்வுகளால் அவர்களது குடும்பம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியைக் குறைக்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம், வேளாண் தொழிலாளர்களின் குடும்ப நலன் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.