ஜம்மு, காஷ்மீரில் நிலச்சரிவு.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

நிலச்சரிவு
நிலச்சரிவுIntel

ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 8 பேர் இன்று பலியாகியுள்ளனர்.

உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் புதுடெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கன மழை கொட்டியது. கங்கை, யமுனை ஆகிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த வகையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சாலை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கத்துவா மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவுகளால் பல்வேறு இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கத்துவா மாவட்டத்தின் மேல்மட்ட பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 8 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் ஜம்முவில் ஏற்பட்ட நிலச்சரிவு காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் நிலச்சரிவால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. போலீசாரும், தன்னார்வலார்களும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com