லதா மங்கேஷ்கர் நினைவு சதுக்கம்; வீணை வடிவில் சிலை!

Lata Mangeshkar
Lata Mangeshkar
Published on

இந்தி திரைப்பட இசைக்குயில்  லதா மங்கேஷ்கர் பெயரில் அயோத்தியில் உள்ள  ராம்நகர் நயாகட் சாலையில் நினைவு சதுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சதுக்கத்தில் 14 டன் எடையில் 40 அடி உயரத்தில்  வீணை சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதில் சரசுவதி தேவியின் உருவம் பொறிக்கப் பட்டுள்ளது. அந்த சிற்பத்தை பத்மஸ்ரீ விருது பெற்ற ராம் சுதாகர் வடிவமைத்துள்ளார்.

நேற்று லதா மங்கேஷ்கரின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி  காணொளி வாயிலாக லதா மங்கேஷ்கர் சதுக்கத்தை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

-இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது;

மறைந்த சகோதரி லதா மங்கேஷ்கரை அவரது பிறந்த நாளில் நினைவு கூறுகிறேன், இத்தனை ஆண்டுகளில் எண்ணற்ற முறை அவரிடம் உரையாடியுள்ளேன், என்னை சந்திக்கும் போதெல்லாம் அன்பு மழை பொழிவார், அவரைப் பற்றி நினைவு கூறுவதற்கு பல விஷயங்கள் உள்ளது.

அவரது பெயரில் அயோத்தியில் உள்ள ஒரு  சாலை சந்திப்புக்கு அவரது பெயர் இன்று சுட்டப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டில் சிறந்த அடையாளச் சின்னங்களில் ஒருவரான அவருக்கு செலுத்தும் உரிய மரியாதை இது என்று கருதுகிறேன், இது சரியான அஞ்சலியாக இருக்கும்.

-இவ்வாறு பிரதமர் மோடி தன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com