லாட்வியா நாட்டின் குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஓரினச்சேர்க்கையாளர் எட்கர் ரிங்கெவிக்ஸ்!

லாட்வியா நாட்டின் குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஓரினச்சேர்க்கையாளர் எட்கர் ரிங்கெவிக்ஸ்!

லாட்வியா நாட்டின் குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான எட்கர் ரிங்கெவிக்ஸ். இவர் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் (Gay) என வெளிப்படையாக கடந்த காலங்களில் அறிவித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இதற்கு முன்னர் ஓரினச்சேர்க்கையாளர்கள் அரசியல் தலைவர்களாக இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஒருபோதும் குடியரசு தலைவராக பதிவேற்றது இல்லை.இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் குடியரசு தலைவராக பொறுப்போற்றுக்கொண்ட நிகழ்வு லாட்வியா நாட்டில் நிகழ்ந்துள்ளது.

பொதுவாக உலகம் முழுவதும் ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பிவரும் நிலையில், எட்கர் ரிங்கெவிக்ஸ் பதவியேற்பு LGBTIQA குழுவினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

எட்கர் ரிங்கெவிக்ஸ் கடந்த 2011ம் ஆண்டு முதல் லாட்வியாவின் வெளியுறவு அமைச்சராக இருந்தவர். 49 வயதான எட்கர் ரிங்கெவிக்ஸ் முதன்முதலில் 2014ம் ஆண்டு தன்னை ஒரு GAY என வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார். அன்றிலிருந்து LGBT உரிமைகளுக்கான குரல் கொடுத்துவருகிறார் எட்கர் ரிங்கெவிக்ஸ். லாட்வியா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணங்கள் கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், அந்நாட்டில் சட்ட ரீதியாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிரூபராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய எட்கர் ரிங்கெவிக்ஸ் பின்னாளில் REFORM PARTY எனும் அரசியல் கட்சியில் இணைந்தார். அவரின் அரசியல் செயல்பாடு காரணமாக மிக இளம் வயதிலேயே லாட்வியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக தேர்வுச் செய்யப்பட்டார். இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற குடியரசு தலைவருக்கான தேர்தலில் எட்கர் ரிங்கெவிக்ஸ் வெற்றிப்பெற்றார்.

லாட்வியா நாட்டின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எட்கர் ரிங்கெவிக்ஸ்,“ நாட்டின் வளர்ச்சிக்கு விரைவாகவும், தீர்க்கமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படவேண்டிய தருணம் இதுவென்றும், தவறுகளுக்கான நேரம் இதுவல்ல என்றார். அதேபோல் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் தற்போதைய போர் முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

1990 களின் முற்பகுதியில் நொறுங்கிய சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து 2004 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த நாடுகளில் லாட்வியாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com