கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்களை விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!

தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் எச்சரிக்கை !
கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்களை விற்றால்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!

கடைகளில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடைகளில் MRP க்கு மேல் கட்டணம் வசூலிப்பது வர்த்தகர் மீது வழக்குத் தொடரக்கூடிய குற்றமாகும் இருப்பினும், பல கடைகள், குறிப்பாக சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள கடைகளில், தண்ணீர் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் மற்றும் சில பேக் செய்யப்பட்ட பொருட்களை MRP ஐ விட அதிகமாக விற்பனை செய்கின்றன. அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த புகார்களை நுகர்வோர் சட்ட அளவியல் துறையிடம் பதிவு செய்யலாம்.

தமிழ்நாடு முழுவதும் மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகள், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட இரண்டாயிரத்து 891 கடைகளில் தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மொத்தமாக 775 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அவற்றிற்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடை குறைவாக விநியோகம் செய்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகளை பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்கள் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை தொடரப்படும் என்றும் தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

எடை அளவைகள் சட்டத்தின் கீழ் மீன், இறைச்சி கடைகளில் எடை குறைவாக விற்பது குறித்து சிறப்பு ஆய்வு நடந்தது.

பொது மக்களுக்கு இது குறித்து புகார் இருந்தால் புகார் அளிக்கலாம்

தமிழ்நாடு சட்ட அளவியல் துறையானது மொபைல் அடிப்படையிலான மற்றும் இணைய அடிப்படையிலான புகார் கண்காணிப்பு அமைப்பு (TN - LMCTS) செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோர் பொருட்கள் மற்றும் கடையின் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து தங்கள் புகார்களை செயலி மூலம் பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் புகார் நிலையைக் கண்காணிக்கவும் இந்த ஆப் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com