Legendary producer AVM Saravanan
Legendary producer AVM Saravananimage credit-news9live.com

#BREAKING ; பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்..!!

Published on

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளருமான ஏ.வி.எம். சரவணன் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 86.

சிறிது காலமாக வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். நேற்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடிய ஏ.வி.எம். சரவணன் சென்னையில் இன்று காலமானார்.

இவரது உடல் ஏவிஎம் ஸ்டியோவில் உள்ள 3-வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழ் நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த ஏ.வி.எம். சரவணன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழி திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

சர்வர் சுந்தரம், சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி, லீடர், மின்சார கனவு, சோரி சோரி உள்ளிட்ட படங்களை ஏவிஎம் சரவணன் தயாரித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com