கேரளாவில் வேகமாக பரவி வரும் லெப்டோஸ்பிரோசிஸ் நோய்… ஒருவர் பலி!

Leptospirosis
Leptospirosis
Published on

கேரளாவில் கடந்த ஒரு வாரக் காலமாக லெப்டோஸ்பிரோசிஸ் என்ற நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் ஒருவர் காலமானார்.

கேரளாவில் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் அவ்வப்போது பல நோய்கள் பரவும். பெயர் தெரியாத மர்ம நோய்களும் பரவி அச்சத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் தற்போது லெப்டோஸ்பிரோசிஸ் என்ற நோய் பரவி அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில்தான் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது.

லெப்டோஸ்பிரோசிஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தாக்குதலுக்குள்ளாகும் நோயாகும். இந்த வகையான நோய் மனிதர்களை மட்டுமல்ல நாய்கள், சுண்டெலிகள் போன்ற விலங்குகளையும் பாதிக்கும். நோய்த்தொற்று உள்ள விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர் அல்லது மண்ணை தொடுவதன் மூலம் நமது மூக்கு, வாய், கண்கள் அல்லது தோலில் ஏதேனும் துளை இருந்தால், அதன் மூலம் நோய் பரவும். 

கடந்த ஒரே வாரத்தில் 15 பேர் நோய் பாதிக்கப்பட்ட அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 31 வயதுடைய  நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கோழிக்கொடு மூழிக்கல்லைச் சேர்ந்த நிஷாத் எனும் இளைஞர்  லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து வார்டு கவுன்சிலர் கூறுகையில், “அவரது காலில் காயம் இருந்ததால் தொற்று நோய் பரவியிருக்கலாம். வயநாட்டைச் சேர்ந்த நிஷாத், பல ஆண்டுகளுக்கு முன் கோழிக்கோடுக்கு குடிபெயர்ந்து வெல்டராக வேலை செய்து வந்தார். அவருக்கு தந்தை குன்ஹிக்கண்ணன், தாய் ஓமனா, மனைவி மஹிதா, மகள் நக்ஷத்ரா மற்றும் சகோதரி நிஷிதா ஆகியோர் உள்ளனர். 

இதையும் படியுங்கள்:
அழிவின் விளிம்பில் இருந்த Great Indian Bustard பறவையினத்தை மீட்ட இந்தியா!
Leptospirosis

மாவட்டத்தில் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நவம்பர் 6 முதல் 12 வரை, 15 உறுதிப்படுத்தப்பட்ட லெப்டோஸ்பிரோசிஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. நேற்று முன் தினம் புதிதாக ஐந்து நோயாளிகள் நோய் தாக்குதலுடன் கண்டறியப்பட்டனர்.  நேற்று செவ்வாயன்று இரண்டு பேர் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.” என்று பேசினார்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com