‘நல்ல நண்பர்களாக இருப்போம்’ கணவரை விவாகரத்து செய்யும் பின்லாந்து பிரதமர்!

‘நல்ல நண்பர்களாக இருப்போம்’ கணவரை விவாகரத்து செய்யும் பின்லாந்து பிரதமர்!

பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின். 37 வயதான இவர் கடந்த 2019ம் ஆண்டு பின்லாந்து நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். உலகின் மிக இள வயது பிரதமர் என்ற சிறப்பு இவருக்கு இருந்தது. அதோடு, இனி வரும் தலைமுறை தலைவர்களுக்கு இவர் ஒரு முன்மாதிரியாக விளங்கினார் என்று கூடக் கூறலாம்.

மரினுக்கும் மார்கஸ் ரைக்னோனனுக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் தங்களது மூன்று வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் இணைந்து விவாகரத்துக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

இது குறித்து இவர்கள் இருவரும் தங்களது தனித்தனி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் செய்தியில், “19 வருடங்கள் ஒன்றாக இருந்ததற்கும், எங்களது அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம். நாங்கள் எங்கள் இளமைப் பருவத்தில் ஒன்றாக வாழ்ந்தோம், ஒன்றாக முதிர்ச்சி அடைந்தோம், எங்கள் அன்பான மகளுக்கு ஒன்றாகப் பெற்றோராக வளர்ந்தோம்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com