கணிதத்தின் சிறப்பை உணர்வோம்!

கணிதத்தின் சிறப்பை உணர்வோம்!

தேசிய கணித தினம்!

னித கண்டுபிடிப்பில் மகத்தான இடத்தைப் பெறுகிறது கணிதம். இதுவே வாழ்வின் அனைத்து வித இயக்கங் களுக்கும் அடிப்படையாக அமைகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் நேரம் முதல் முதலீடு வரை அனைத்தையும் கணக்குப் போட்டு செயல்படுத்திய வராகவே இருப்பர். கணிதம் அறியாதவர்கள் நிர்வகிக்கும் நிறுவனம் விரைவில் மூடவேண்டிய சூழலில் சிக்கும். இப்படி சிறப்பு மிக்க கணிதத்தைக் கொண்டாடும் வகையில் டிசம்பர் 22-12-22 தேசிய கணித தினமாக அனுசரிக்கப்படுகிறது.

       எண்கள், வடிவங்கள், அளவுகள், அதன் மாற்றங்கள் மற்றும்   சூத்திரங்கள் அடங்கிய அறிவியல் கண்டு பிடிப்புகளையே கணிதம் என்ற பெயரில் அறிகிறோம். நிலம் முதல் விண்வெளி வரை அதன் செயல்களை கணித்து மதிப்பீடு செய்ய பெரும் உதவியாக இருக்கும் கணிதத்தின் பகுதிகள் கடலுக்கு ஒப்பானது. இவற்றின் தேவைகளை கருத்தில் கொண்டு எண்கணிதம் இயற்கணிதம் வடிவியல், நுண்கணிதம் என நான்கு பிரிவுகளாக முறைப்படுத்தப்பட்டுள்ளன. கணிதம் இயற்கை முதல் விஞ்ஞானம் வரை உலகில் உள்ள அனைத்து மாற்றங்களுக்கும் முக்கியமானதாக உள்ளது.

    ணக்கு என்றாலே எட்டிக்காயாக கசக்கும் சிலருக்கு. ஆனால் பலரோ, கணக்குப் போட்டு வாழ்ந்து வெற்றியாளராக ஆகின்றனர். கண் மூடித்தனமாக முதலீடு செய்து கணக்கின்றி தொழில் நஷ்டமாகி வேதனைப்படுவோர் அதிகம். இது போன்று இல்லாமல் கணக்குப் போட்டு வாழ்வில் வெற்றி பெற முயல வேண்டும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் பயிற்சி செய்ய செய்ய கணக்கும் நிச்சயம் கைவரும்.  

மனித வளர்ச்சிக்கு இன்றியமையாத கணிதத்தின் சிறப்பை குழந்தை முதலே எடுத்துச் சொல்லி வளர்க்க வேண்டும். கணிதம் குறித்த விழிப்புணர்வை நாம் ஆராய்ந்து பெற வேண்டும், இளைய தலை முறையினருக்கு கணிதம் மீதான ஆர்வத்தைப் பெருக்கும் வழிமுறைகளை ஆசிரியர்கள் கொண்டு வரவேண்டும். கணக்கை சரியான முறையில் கற்று அதைப் பயன்படுத்தி சமூகத்தை உயர்வடையச் செய்வதே கணித மேதை ராமானுஜத்துக்கு நாம் செலுத்தும் நன்றியாகும். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com