இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை!

Whatsapp leaving in India
Whatsapp leaving in India

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ஒரு செயலி வாட்ஸ்அப் தான். குறுஞ்செய்தி அனுப்புதல், புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்புதல் மற்றும் வீடியோ கால் வசதி என அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதே வாட்ஸ்அப்பின் முக்கிய அம்சமாகும். இதனால் தான் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து நபர்களையும் மிக எளிதில் தொடர்பு கொள்ளக் கூடிய தொழில்நுட்ப வசதியுடன் செயல்படுகிறது வாட்ஸ்அப். இந்நிலையில், இந்தியாவை விட்டு வாட்ஸ்அப் வெளியேறப் போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்த உண்மைத்தன்மையை இப்போது காண்போம்‌.

வாட்ஸ்அப்பில் சில போலியான தகவல்கள் அவ்வப்போது பகிரப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், போலியான தகவல்களை பகிரும் நபர்களின் விவரங்களை அளிக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், பயனாளர்களின் விவரங்களை அளிக்கமாட்டோம் என வாட்ஸ்அப் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப விதிகளில் 2021 ஆம் ஆண்டில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வாட்ஸ்அப் நிறுவனம், அனைத்து தகவல்களும் பாதுகாப்பான முறையில் அனுப்பப்படுவதால் தான், 40 கோடி இந்தியப் பயனாளிகள் வாட்ஸ்அப்பை நம்பி பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மற்ற நாடுகளில் இதுபோன்ற சட்டத் திருத்தங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. 

பயனாளர்களின் விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்களை இந்திய அரசு தொடர்ந்து கேட்கும் பட்சத்தில், நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பயனாளர்களின் விவரங்களை அரசு எப்போது கேட்கும் என்பதும் தெரியாது. இதனால், கோடிக்கணக்கான வாட்ஸ்அப் தகவல்களை பல வருடங்களுக்கு சேமித்து வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டுகள் சிறை – ஈராக்கில் அதிரடி!
Whatsapp leaving in India

சமூக வலைதளங்களில் ஏற்கனவே பலரது தகவல்கள் திருடப்பட்டு வரும் நிலையில், பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். இந்நிலையில், போலியான தகவல்களை பரப்பும் பயனர்களின் விவரங்களை மத்திய அரசு கேட்டிருப்பது, வாட்ஸ்அப்பில் பரவும் போலியான தகவல்களை கட்டுப்படுத்த தான் என வாட்ஸ்அப் நிறுவனம் புரிந்து கொள்ளவில்லை.

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்த வழக்கு வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதன் பிறகு தான் வாட்ஸ்அப் எப்போதும் போல செயல்படுமா அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுமா என்பது தெரிய வரும். ஒருவேளை வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறினால், நிச்சயமாக பயனாளர்கள் ஏமாற்றம் அடைவார்கள். இந்தியா நாடே ஸ்தம்பித்துப் போகும் அளவிற்கு சூழ்நிலை உருவாகும். ஏனெனில் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்த பிறகு, அனைவருமே பயன்படுத்தும் ஒரு செயலி என்றால் அது வாட்ஸ்அப் தான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என யாருக்கேனும் தகவல் அனுப்ப வேண்டும் என்றால், உடனே நம் நினைவுக்கு வருவதும் வாட்ஸ்அப் தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com