குளத்தை காணோம்.... பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில செயலாளர் புகார்!

குளத்தை காணோம்.... பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில செயலாளர் புகார்!

சென்னை குன்றத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தங்கள் பகுதியில் இருந்த குளத்தை காணவில்லை என புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடிவேலு ஒரு படத்தில் கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிப்பார், அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது சென்னையில் உண்மையாக நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குன்றத்தூரில் அரசுக்கு சொந்தமான சர்வே எண் 562/Aல் அமைந்திருந்தது தொடுகுட்டை என்ற குளம். சுமார் 50 செண்ட் பரப்பளவில் இக்குளம் படர்ந்திருந்தது. பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், கால்நடைகளின் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர்நீதி மன்றம் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அசுர நகர்புற வளர்ச்சியின் காரணமாக காலப்போக்கில் சிலர் அக்குளத்தை ஆக்கிரமித்து வீடு,வணிக வளாகங்கள் உள்ளிடவற்றை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குளம் அப்பகுதியில் இருந்த தடயமே இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளால் அழிக்கப்பட்ட குளத்தை கண்டுபிடித்து தருமாறு சமூக ஆர்வலரும், பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில செயலாளருமான பாஸ்கர் என்பவர் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வடிவேலு பட பாணியில் சென்னையில் நடந்த இந்த சம்பவம் சிரிப்பிணை வரவழைத்தாலும் உண்மையில் சிந்திக்க தூண்டுகிறது. அரசாளும் பொது மக்களாலும் நீர் நிலைகள் குளங்கள் போன்றவை பாதுகாக்க பட வேண்டியவைகள். அவைகள் பிளாட்டுகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருவதும் ஆபத்தான வழக்கம் தானே? இனியாவது சிந்தித்தால் நலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com