ஒன்றாக உழைப்போம் - பிரதமர் மோடி!

Modi
Modi
Published on

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய மோடி, எதிர்ப்பு அரசியல் இருந்து எதிர்கட்சிகள் வெளியேற வேண்டும் என்றும், ஒன்றாக உழைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாக பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார்.

அதாவது, பார்லிமென்டில் முக்கியம்வாய்ந்த பட்ஜெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டம் சுமுகமாக நடைபெற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த பட்ஜெட் கூட்டத்தை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. '2047ல் வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடையும் நோக்கில் வசந்த காலத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளைவிட தற்போது இந்தியா முன்னேறி வருகிறது. இந்த வளர்ச்சிப் பாதையில் நாடு தொடர்ந்து முன்னேறும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது.

மக்களின் நலனுக்காக உழைத்து அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். இனி 2029ம் ஆண்டு அரசியல் நகர்வுகளை நிகழ்த்தலாம். தற்போது மக்கள் நலனில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
"இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், கிரிக்கெட் ஒன்றும் அழிந்துவிடாது!" – ஹசன் அலி!
Modi

தேர்தலில் பிரசாரம், போட்டியிட்ட நிகழ்வு எல்லாம் முடிந்து விட்டது; இனி ஒற்றுமையாக செயல்பட வேண்டும். எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் அனைவரும் நாட்டுக்காக ஒருங்கிணைந்து போராட வேண்டும். கட்சி வித்தியாசங்கள் இன்றி, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும்.

பார்லிமென்டில் தங்கள் சொந்த ஏமாற்றத்தால், நேரத்தை வீணடிக்கின்றனர். அரசின் குரலை அங்கு நசுக்க முயற்சிக்கக்கூடாது. ஏமாற்றம் காரணமாக எல்லா விவகாரங்களிலும் எதிர்மறையான கருத்துகளை தெரிவிப்பது சரியல்ல. தோல்வியால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பார்லிமென்டின் நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடிக்கின்றன.” இவ்வாறு அவர் பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com