டைட்டானிக் கப்பலில் பயணித்த ஒருவரின் கடிதம் 3.5 கோடிக்கு ஏலம் போனது குறித்தான செய்திதான் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான செய்தியை பார்ப்போம்.
டைட்டானிக் விபத்து ஏற்பட்டு பல வருடங்கள் ஆனாலும், உலக மக்களால் மறக்கமுடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்து வருகிறது. டைட்டானிக் விபத்தில் பலியானோர் அதிகம், அதேபோல் உயிர் தப்பியவர்களும் உண்டு. அந்த விபத்திலிருந்து தப்பித்த ஒருவர் தனது சொந்த நாட்டிலேயே புறக்கணிக்கப்பட்ட கதையைதான் இப்போது நாம் பார்க்கவுள்ளோம்.
1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் டைட்டானிக் என்ற கப்பல் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் இது மிகப்பெரிய கடல் விபத்தாகவே கருதப்படுகிறது.
இந்த விபத்தில் இறந்தவர்களின் ஏதாவது பொருட்கள் குறித்த ஒரு செய்திகள் அவ்வப்போது வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவான படம்தான் டைட்டானிக். உலகம் முழுவதும் இன்றும் பேசப்படும் ஒரு படமாக இருந்து வருகிறது.
இப்படியான நிலையில்தான் கப்பலில் பயணித்தவர் ஒருவரின் கடிதம் ஏலம் போயிருக்கிறது. அதில் பயணித்த கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி(Archibald Gracie) என்ற பயணி எழுதிய கடிதம், நேற்று இங்கிலாந்தில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. £60,000க்கு இந்த கடிதம் ஏலத்தில் வாங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் அந்த கடிதத்தை £300,000 (இந்திய மதிப்பில் ரூ.3 கோடி)க்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.
இந்த கடிதத்தின் சொந்தக்காரரான கிரேசி முதல் வகுப்பில் பயணித்தவர். பயணம் புறப்பட 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதியன்று, C51 கேபினிலிருந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
ஏப்ரல் 11 ஆம் திகதி, அயர்லாந்தின் குயின்ஸ்டவுனில் கப்பல் நின்ற போது, இந்த கடிதம் அஞ்சல் செய்யப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், இந்த பயணம் முடிந்த பிறகே டைட்டானிக் கப்பல் ஒரு சிறந்த கப்பல் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று எழுந்திருந்தார்.