ஈரானின் கண்ணில் மண்ணைத் தூவிய இந்திய மாலுமி! நள்ளிரவில் லைட் அணைத்து மும்பை வந்த 'ஷென்லாங்' - திக் திக் பின்னணி!

Shenlong
Shenlong Image source: etvbharat
Published on

ஹார்மோஸ் ஜலசந்தி என்பது பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாகும்.இது ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள குறுகிய நீர்வழிப் பாதை ஆகும் இதன் அகலம் 33 மைல் மட்டுமே இது உலகளாவிய கச்சை எண்ணை விநியோகத்தில் 20% அதிகமாக கொண்டு செல்லும் முக்கியமான கடல் பாதை ஆகும்.

உலகின் மிக முக்கியமான எண்ணெய் சாக் பாயிண்டாக உள்ளது. தினசரி மில்லியன் கணக்கில் எண்ணெயில் சவுதி அரேபியா, ஈரான ஈராக் போன்ற நாடுகளில் இருந்து இந்த வழித்தடத்தின் வழியாக உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது,வடக்கே ஈரான் தெற்கே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

இந்தப் பகுதியில் அரசியல் ரீதியாக மிகவும் பதற்றமான இடமாகும். பெரும்பாலும் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் புள்ளியாக திகழ்கிறது. இந்த வழித்தடத்தை ஈரான் மூடுவதாக விடுக்கும் அச்சுறுத்தல்களை சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.பெரும்பாலான வர்த்தக கப்பல்கள் இந்த பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.. இது ஆழமான கப்பல் போக்குவரத்திற்கு பாதுகாப்பான பாதையாக கருதப்படுகிறது.

இதன் வடக்கில் ஈரானும் தெற்கில் ஓமனின் முஷாந்தமும் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தான் ஹார்மோஸ் தீவும் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஒருமைல் அகலம் உள்ள இரண்டு கால்வாய்கள் கப்பல் போக்குவரத்திற்கு பயன்பட்டு வருகிறது.

பாரசீக வளைகுடாவை சுற்றியுள்ள நாடுகள் திறந்த கடற் பகுதியை அடைவதற்கு ஒரே வழி இந்த இடம் தான். இது ராணுவ முக்கியத்துவம் கொண்ட பகுதியாகும். 2012 ஆம் ஆண்டும் இதுபோன்று ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டது.2026பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் அதிபர் கோமத கொல்லப்பட்டதற்காக இதை அனுமதிக்கவில்லை. 2026 மார்ச் இரண்டாம் தேதி முதல் ஹார்மோஸ் ஜெலசந்தி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது

இந்த அறிவிப்பானது அமெரிக்காவிற்கும் உலக நாடுகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில கப்பல்கள் சீனாவின் யுவான் நாணயத்தை பயன்படுத்தி அனுமதிக்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அது மட்டும் அல்ல எரிவாயு உரம் உணவுப் பொருட்கள் மருந்து ஆகிய அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் சீனாவில் யுவான் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச நெருக்கடியை சமாளிக்க முடியும் என நம்புகிறார்கள். இதன் மூலம் எல்பிஜி விலையும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது.இந்த சூழ்நிலையிலும் ஒரு கப்பல் இந்தியாவில் உள்ள மும்பை துறைமுகத்திற்கு வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்தக் கப்பலின் பெயர் ஷென்லாங்.இது லைப்ரியா நாட்டைச் சேர்ந்த கப்பல்.ஆனால் இதை ஓட்டி வந்தவர் இந்திய மாலுமி.இந்தக் கப்பலில் உள்ள ஏ ஐ எஸ் ஆட்டோமேட்டிக் ஐடென்டிவிகேஷன் சிஸ்டம் பயன்படுத்தி இந்த கப்பலில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் அனைத்தையும் இருட்டாக்கி ஒருவருக்கும் தெரியாமல் இந்த கால்வாயை கடந்து வந்துள்ளனர்.

இந்த கப்பலில் மொத்தம் 29 பேர் இருந்துள்ளனர். ஒரு லட்சத்து 35000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இந்தக் கப்பலில் வந்து இறங்கி உள்ளது.அந்த எண்ணெய் பேரல்களை இறக்கி வைக்க சுமார் 38 மணி நேரம் பிடித்தது

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "இனிமேலும் ஹார்மோஸ் ஜலசந்தியை மூடினால், உலக வரைபடத்தில் ஈரான் என்ற நாடு இருந்த இடமே தெரியாமல் ஆக்கிவிடுவோம்" என அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com