போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்ததால் 18 பர்மா நிறுவன உரிமம் ரத்து!

போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்ததால் 18 பர்மா நிறுவன உரிமம் ரத்து!

போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்ததையடுத்து 18 பர்மா நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 26 நிறுவனங்களுக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் சுகாதாரத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இயக்குனராக அதிகாரிகள் இணைந்து நாடு முழுவதும் 20 மாநிலங்களில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தரமற்ற, போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில், கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்ததையடுத்து 18 பர்மா நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 26 பர்மா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் 203 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவை. அங்கு மட்டும் 70 பர்மா நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் 45 பர்மா நிறுவனங்கள் மற்றும் மத்தியப் பிரதேசம் 23 பர்மா நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும், வரும் நாட்களில் இது போன்ற ஆய்வுகள் தொடரும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com