வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு!

தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு ஆலோசனை!
Aadhar card
Aadhar card

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணை க்கவேண்டும் என்று நெடுநாள் கோரிக்கைகள் பல தரப்பிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் இன்று பிற்பகலில் ஆலோசனை செய்ய இருக்கிறார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையமும் தெரிவித்திருந்ததையடுத்து தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் மற்றும் விவரங்கள் இணைக்கும் பணி நடந்தது.

சத்திய பிரதா சாகு
சத்திய பிரதா சாகு

கடந்த வாரம் வரை இதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இந்த இணைப்பின் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒழிக்க முடியும். ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது கட்டாயமில்லை. இருந்தபோதிலும், ஆதார் விபரங்களை இணைக்காததற்கு நியாயமான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களோடு இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி மூலமாக தலைமை தேர்தல் அதிகாரி இந்த ஆலோசனையை மேற்கொள்ள இருக்கிறார். இனி போலி வாக்காளர் அட்டைகளும், கள்ள ஓட்டுகளும் குறைய பெருமளவில் வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com