மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள்! மின்வாரியம் அதிர்ச்சி!

மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள்! மின்வாரியம் அதிர்ச்சி!
Published on

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அது தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை சரிபார்த்தபோது ஏராளமான மின் இணைப்புகளுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதனை கண்டு மின் வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்கள் 2 கோடியே 67 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6-ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான கால அவகாசம் வரும் 15-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள சூழலில்,இதன் பிறகு தற்போது கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 90 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

EB

இந்தநிலையில் இதனை ஆய்வு செய்தபோது, பல இடங்களில் உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதிகளவிலான மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின் வாரிய தரப்பில் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண் மட்டுமே மின் இணைப்பு எண்களுடன் இணைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதில், உயரதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, பணி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அனைத்து பகிர்மான பிரிவு தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com