ஸிவா
ஸிவா

தோனி மகள் ஸிவாவுக்கு மெஸ்ஸி அன்புப் பரிசு!

அர்ஜெண்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி, தனது அணியின் ஜெர்சியை "Para Ziva" (ஸிவாவுக்காக) என கையெழுத்திட்டு இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஸிவாவுக்கு பரிசாக அளித்துள்ளார்.

கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்துப் போட்டியில் கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் தலைமையில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றது. அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றதையடுத்து உலகமே மெஸ்ஸியைக் கொண்டாடி வருகிறது.

இதையடுத்து நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் தோனியின் ஏழு வயது மகள் ஸிவாவுக்கு தனது கையெப்பம் இட்ட அர்ஜெண்டினா அணி ஜெர்சியை பரிசளித்துள்ளார்.

அந்த ஜெர்சியை அணிந்து ஸிவா  தன் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில், "தந்தையைப் போல் மகள்" என ஸிவா குறிப்பிட்டுள்ளார். இது தோனியை போன்று ஸ்வாவுக்கும் கால்பந்து விளையாட்டு மீது இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தோனி கிரிக்கெட் விளையாடுவதற்கு முன் தனது பள்ளி காலத்தில் கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்தது குறிப்பிடத் தக்கது. மேலும் அவர் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி அணியின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.

தற்போது தோனியின் மகள் ஸிவாவுக்கு தனது அணி ஜெர்சியை நட்சத்திர வீரர் மெஸ்ஸி பரிசளித்தது வைரலாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com