அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க கடற்படைக்கு தலைமை தளபதியாக லிசா பிரான்செட்டி எனும் பெண்ணை முதல் முறையாக தேர்ந்தெடுத்துள்ளார். லிசா பிரான்செட்டி தேர்வின் மூலம் பெண்டகன் இராணுவ சேவைக் கிளையின் தலைவராக ஒரு பெண் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கடற்படையின் துணை தலைவியாக லிசா பணியாற்றி வரும் நிலையில் அவரை கடற்படை தலைமை தளபதியாக அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.இந்த நியமனத்தின் மூலம் அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல் பெண் உயர் அதிகாரி மற்றும் முதல் பெண் கூட்டுப்படை தலைவி என்ற பெருமையை லிசா பெற்றுள்ளார். இவரது நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
38 ஆண்டுகள் அமெரிக்க கடல் படையில் பணியாற்றிவரும் லிசா,நான்கு நட்சத்திர அட்மிரல் பதவியை அடைந்த இரண்டாவது பெண்மணி ஆவார்.லிசா பிரான்செட்டி நியமனம் குறித்து த ஸ்டேட்ஸ்மென் இதழுக்கு பேட்டி அளித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “லிசா பிரான்செட்டி செயல்பாடு மற்றும் கொள்கை ஆகிய இரண்டிலும் விரிவான நிபுணத்துவம் பெற்றவர் என அவரை பாராட்டியுள்ளார். லிசா இந்த புதிய நியமனம் செனட்டால் உறுதிப்படுத்தப்பட்டால் அவர் மீண்டும் சரித்திரம் படைப்பார்" என்று கூறினார்.
அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டினின் முதல் தேர்வு Adm Franchetti அல்ல, அதற்கு பதிலாக TOPGUN பட்டதாரி சாமுவேல் பாப்பரோவை அடுத்த கடற்படைத் தலைவராக பரிந்துரைக்கவேண்டும் என்பதுதான். ஆனால், லிசா பிரான்செட்டி இதுபோன்ற கடும் போட்டிகளுக்கு பின்னர்தான் அதிபர் பைடனால், கடற்படை தளபதியான பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.