

2026 தமிழ்நாடு அரசு விடுமுறைகள்:
ஜனவரி 1 – வியாழக்கிழமை- புத்தாண்டு
ஜனவரி 15 – வியாழக்கிழமை- பொங்கல்
ஜனவரி 16 – வெள்ளிக்கிழமை- திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 – சனிக்கிழமை- உழவர் திருநாள்
ஜனவரி 26 – திங்கட்கிழமை- குடியரசு தினம்
பிப்ரவரி 1 – ஞாயிற்றுக்கிழமை- தைப்பூசம்
மார்ச் 19 – வியாழக்கிழமை- தெலுங்கு புத்தாண்டு
மார்ச் 21 – சனிக்கிழமை- ரம்ஜான் பண்டிகை
மார்ச் 31 – செவ்வாய்க்கிழமை- மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 1 – புதன்கிழமை- வங்கி ஆண்டு கணக்கு முடிப்பு நாள்
ஏப்ரல் 3 – வெள்ளிக்கிழமை- புனித வெள்ளி
ஏப்ரல் 14 – செவ்வாய்க்கிழமை தமிழ்ப் புத்தாண்டு
மே 1 – வெள்ளிக்கிழமை- மே தினம்
மே 28 – வியாழக்கிழமை- பக்ரீத்
ஜூன் 26 – வெள்ளிக்கழமை - மொஹரம்
ஆகஸ்ட் 15 – சனிக்கிழமை- சுதந்திர தினம்
ஆகஸ்ட் 26 – புதன் கிழமை- மிலாது நபி
செப்டம்பர் 4 – வெள்ளிக்கிழமை- கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 14 – திங்கட்கிழமை- விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 2 – வெள்ளிக்கிழமை- காந்தி ஜெயந்தி
அக்டோபர் 19 – திங்கட்கிழமை- ஆயுத பூஜை
அக்டோபர் 20 – செவ்வாய்க்கிழமை- விஜயதசமி
நவம்பர் 8 - ஞாயிற்றுக்கிழமை- தீபாவளி
டிசம்பர் 25 – வெள்ளிக்கிழமை- கிறிஸ்துமஸ்.
2026-ஆம் ஆண்டில் பல விடுமுறை நாட்கள் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
பொங்கல் பண்டிகை புதன் முதல் வெள்ளி வரை வருவதால், சனி மற்றும் ஞாயிறு சேர்த்து மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.2026-ல் தீபாவளி போன்ற ஒரு சில முக்கிய பண்டிகைகள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றன. மற்ற பெரும்பாலான விடுமுறைகள் வார நாட்களிலேயே வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விடுமுறைகள் தவிர, ஞாயிற்றுக்கிழமைகள் வழக்கம்போல பொது விடுமுறையாகவே இருக்கும். மேலும் அரசு அலுவலகங்களுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 2026 ஆண்டு மொத்தம் 52 ஞாயிறு + 24 +25 (2வது மற்றும் 4வது சனிக்கிழமை) அரசு விடுமுறை, என 101 நாட்கள் விடுமுறை நாட்களாக அமைகின்றன.