கடன் ஏஜெண்டுகள் மிரட்டுகிறார்களா? - இதோ உங்களுக்கான RBI பாதுகாப்பு விதிகள்!

rbi
rbi
Published on

இந்திய மக்களின் பிரச்சினைகளுள் மிக முக்கியமானது கடன்.தற்கால இந்தியச் சூழலில் கடன் என்பது மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. வருமானம் எவ்வளவு இருந்தாலும், அதையும் தாண்டிய கடன் சுமையுடன் வாழ்வதே பலரின் இயல்பான மனநிலையாக மாறியுள்ளது; இருப்பினும், வருமானத்திற்குள் சிக்கனமாக வாழ்ந்து நிம்மதி காண்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

அன்று அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வாங்கப்பட்ட கடன், இன்று சொகுசு வாழ்க்கைக்காகவும் தாராளமாகப் பெறப்படுகிறது. குறிப்பாக, தனியார் வங்கிகளில் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால், தற்போதைய காலக்கட்டத்தில் கடன் பரிவர்த்தனைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவு அதிகரித்துள்ளன.

கடன் வாங்கி செலவு செய்தவர்கள் அந்தக் கடனை சந்தர்ப்ப சூழலால் கட்ட முடியாமல் போனால் அவர்கள் அனுபவிக்கும் நிலை வேதனையானது. ஆம். கடன் பெற்ற வங்கிகள் சார்பில் வரும் ஏஜெண்டுகள் தரும் தொல்லைகள் மன உளைச்சல் தந்து சில சமயங்களில் தற்கொலைக்கு தூண்டும்.அப்படிப்பட்ட மரணங்களை நாம் கேள்விப்பட்டு உள்ளோம்.

இவர்கள் மனசாட்சியின்றி நடந்து கொள்ளும் முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கடனுக்கு மேல் பெரும் தொகையை வட்டியைக் கட்டுவதும் உண்டு. இந்த ஏஜெண்டுகள் மீதான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் கடன் மீட்பு செயல்முறை சட்டத்திற்கு உட்பட்டும், மிகவும் தன்மையாகவும் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் லோன் ரெக்கவரி ஏஜெண்டுகள் (Loan Recovery Agents) எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை RBI (Reserve Bank of India) தெளிவான விதிமுறைகளாக(Fair Practices Code / Guidelines) வகுத்துள்ளது.

தொலைபேசி அழைப்பு நேரம் :

காலை 8:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மட்டுமே சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் அழைக்க வேண்டும். இந்த நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அழைக்கத் கூடாது.

மிரட்டுவது , கத்தி அவமானப்படுத்துதல், தவறான வார்த்தை பிரயோகங்கள், குடும்பத்தினர் பக்கத்து வீட்டினர், அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் போன்றவர்களிடம் சொல்லி அவமானப்படுத்துதல் என இவை அனைத்தும் சட்டவிரோதமான செயல்களாகிறது. மேலும் ஏஜெண்டின் பெயர் எந்த வங்கி / NBFC-யை சேர்ந்தவர், ID Card / Authorization letter போன்ற அடையாள ஆவணங்களை காட்டாமல் பேசக்கூடாது என்றும் கடன் பெற்ற பெண்களிடம் இரவு நேரத்தில் தொடர்பு கொள்வது தனியாக வீட்டுக்கு வந்து அழுத்தம் கொடுப்பது ஆகியவை சட்டப்படி தவறாகிறது.

WhatsApp DP-ல் போஸ்டர் வைப்பது, Facebook / Instagram-ல் பெயர் டேக் செய்து அவமானப்படுத்துவது, வாட்ஸ்அப் message / group-ல் பெயர் வெளியிடுதல் போன்ற சமூக ஊடக தொல்லை RBI விதிப்படி கடுமையான மீறல்களாகிறது.

கடன் விவரங்களை மூன்றாம் நபருக்கு (Relatives, Neighbours, Office) சொல்லக்கூடாது என்பதும் விதிகளில் ஒன்று.

Force collection / Physical harassment தடை வீட்டில் வந்து அமர்ந்து வெளியே போக விடாமல் தடுப்பது, வாகனம் போன்றவற்றை வலுக்கட்டாயமாக பிடுங்குவது, கையெழுத்து போட சொல்லி கட்டாயப்படுத்துவது ஆகியவைகள் குற்றச்செயல் என்றும் agent தவறு செய்தால் வங்கியே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர் புகார் கொடுத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

சரி இது போன்ற ஏஜெண்டுகள் உங்களிடம் பிரச்சினை செய்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் செய்யவேண்டும்.(Bank / NBFC customer care ) எழுத்து பூர்வமாகவோ அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி போன், இமெயில் மூலம் (Written complaint (mail / app) எழுத்துப்பூர்வமான புகார் மூலமாக தொடர்பு கொள்ளவும். புகாரை பதிவு செய்த பிறகு உங்களுக்கான புகார் எண்ணை நீங்கள் பெறுவது அவசியம். வங்கியிடமிருந்து 30 நாளில் தீர்வு கிடைக்காத நிலையில் RBI-க்கு (https://cms.rbi.org.in)நேரடி புகார் அளிக்கலாம்.

அதிக மிரட்டல் , அவமானப்படுத்துதல், தாக்குதல் இருந்தால் காவல் நிலையத்தில் புகாரளித்து IPC & IT Act கீழ் வழக்கு பதிவு செய்யலாம். நன்றாக நினைவில் வையுங்கள் ,கடன் வாங்கியதற்காக உங்களை யாரும் அவமானப்படுத்தவோ, மிரட்டவோ, சட்டவிரோதமாக அழுத்தம் கொடுக்கவோ முடியாது.

தேவையெனில் அவர்களுடைய போன் கால்கள், மெசேஜ்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள் போன்றவற்றை பதிவு செய்து ஆதாரங்களாக சேமித்து வைப்பது அவர்கள் மீதான குற்றங்களை நிரூபிக்க சான்றுகளாகும்.

கடன் தவணைசெலுத்த முடியாத நிலையில் என்ன செய்யலாம்?

EMI தொகைகளை குறைக்கவும், கடன் கால அளவை நீட்டித்து தருமாறும் கோரிக்கை விடுக்கலாம். அதேபோல் கடன் வசூல் தடை கோருவதால் தற்காலிக நிவாரணம் பெறலாம். வங்கியுடன் பேசி உங்களால் தர முடிந்த தொகையை கொடுத்து கடனை செட்டில்மெண்ட் செய்வது நல்லது.

வங்கியுடனான அந்த தகவல் எழுத்துப்பூர்வமானதாக இருக்க வேண்டும். வங்கி தரும் ஒப்பந்தங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

எவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும்?

ஏஜெண்டுகள் மிரட்டினால் பயந்து உடனே அவர்களிடம் பணம் கொடுக்க வேண்டாம். அதிகாரப்பூர்வ வங்கி முறைகளை மட்டுமே நம்புங்கள். சரியான ID அல்லது அதிகாரப்பூர்வ எழுத்து வடிவிலான அறிவிப்பு இல்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டாம்.குறிப்பாக இது போன்ற ஏஜெண்டுகள் வந்தால் வெளியே தெரிந்தால் அவமானம் என சமூக அந்தஸ்தைப் பார்ப்பதை தவிர்த்து நியாயமற்ற விதிமுறைகளை துணிவாக எதிர்த்து நில்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com