
முதன்முறையா கடன் வாங்குறவங்களுக்கு பம்பர் பரிசு! இனி சிபில் ஸிஸ்கோர் தேவையில்லை! புதுசா கடன் வாங்கப் போறவங்க இவ்வளவு நாளா, ஒரு பெரிய சிக்கலை சந்திச்சிட்டு வந்தாங்க. என்னன்னா... அவங்களுக்குன்னு எந்த ஒரு கிரெடிட் ஹிஸ்டரியும் இருக்காது. சிபில் ஸ்கோர் இருக்காது. அதனால, பேங்குகள் கடன் கொடுக்க மாட்டாங்க.
நிதி உலகில், சிபில் ஸ்கோர் (CIBIL Score) என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது ஒரு தனிநபரின் கடன் தகுதியை (creditworthiness) மதிப்பிடும் ஒரு எண்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், ஒருவருக்குக் கடன் வழங்குவதற்கு முன், அவருடைய சிபில் ஸ்கோரை ஆய்வு செய்கின்றன.
இந்த ஸ்கோர், ஒருவர் கடனைத் திரும்பச் செலுத்துவதில் எவ்வளவு பொறுப்புடன் நடந்துகொள்கிறார் என்பதைப் பிரதிபலிக்கிறது.
ஒரு சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண் ஆகும். இது ஒரு தனிநபரின் கடன் தகுதியைக் குறிக்கிறது.
கடனைத் திரும்பச் செலுத்திய வரலாறு, செயலில் உள்ள கடன்கள் மற்றும் நிதி ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஸ்கோர் கணக்கிடப்படுகிறது.
இது கிரெடிட் இன்ஃபர்மேஷன் பியூரோ (இந்தியா) லிமிடெட் (CIBIL) நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
வங்கிகள் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு இந்த ஸ்கோரை ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்துகின்றன.
கிரெடிட் ஹிஸ்டரி இல்லாததால் முதல்முறை கடன் வாங்குவோர் இந்தச் சிக்கலைச் சந்திக்கின்றனர்.
இனிமேல் அப்படி ஒரு கவலை வேண்டாம்! மத்திய அரசு புதுசா ஒரு விஷயத்தை தெளிவா சொல்லியிருக்கு!
மத்திய நிதி அமைச்சகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிபில் ஸ்கோர் இல்லைங்கிற ஒரே காரணத்துக்காக, ஒரு புதிய விண்ணப்பதாரருக்கு கடன் கொடுக்க பேங்குகள் மறுக்க முடியாது என்று நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ரிசர்வ் வங்கி (RBI) ஏற்கனவே வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த விஷயத்தை அறிவுறுத்தியுள்ளதாம். இது முதல்முறையாக கடன் வாங்குபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
கடன் வழங்குபவர்கள், விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த தகுதியை, பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டுதான் முடிவு செய்ய வேண்டும்.
சிபில் அறிக்கை என்பது அதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் வாங்க சில முக்கிய நிபந்தனைகள்! : சிபில் ஸ்கோர் இல்லை என்றாலும், பேங்குகள் முழுமையான 'டியூ டிலிஜென்ஸ்' (due diligence) எனப்படும் கடன் தகுதியை சோதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
பழைய கடன்களைத் திரும்ப செலுத்தும் முறை
ஏற்கனவே முடித்த அல்லது மறுசீரமைக்கப்பட்ட கடன்கள்
ஏதேனும் கடன் தவறு நடந்திருக்கிறதா என்பது போன்ற தகவல்கள் ஆராயப்படும்.
ஆக, எந்த ஒரு விண்ணப்பமும் குருட்டாம்போக்கில் அனுமதிக்கப்படாது.
சிபில் அறிக்கை கட்டணம்: தனிநபர்களுக்கு தங்கள் சிபில் அறிக்கையை வழங்குவதற்கு கிரெடிட் தகவல் நிறுவனங்கள் (CICs) ₹100 மட்டுமே கட்டணமாக வசூலிக்க முடியும்.
இலவச அறிக்கை: RBI-யின் 2016 சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு கிரெடிட் தகவல் நிறுவனமும் வருடத்திற்கு ஒரு முறை இலவச சிபில் அறிக்கையை மின்னணு வடிவில் வழங்க வேண்டும்.