வாராக்கடன் குறைந்திருக்கிறது; மஞ்சள் கடிதம் தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வாராக்கடன் குறைந்திருக்கிறது; மஞ்சள் கடிதம் தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக வாராக்கடன் இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்தது முதல் வாராக்கடன் என்பது தேசிய அளவில் அரசியல் பிரச்னையாக தொடர்ந்து இருந்து வருகிறது.

2013ல் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு 5 சதவீதம் இருந்தது. தொழிலதிபர்கள், பெரு நிறுவனங்கள் என வங்கிகள் நிறைய கடன்களை வழங்கியதால் வசூல் செய்ய முடியாத நிலை இருந்தது. உள்நாட்டில் கடனை வாங்கி விட்டு, இந்தியாவை விட்டு வெளியேறிய விஜய மல்லையா, மொகுல் சோக்சி, நிரவ் மோடி என நீண்ட பட்டியலும் உண்டு.

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு சொத்துகள் கையகப்பட்டுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பா.ஜ.க அரசு, கடனாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து விமர்சனம் இருந்து வருகிறது. கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், வசூலிக்க முடியாத வாராக்கடனாக 10 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தபோது, நாடெங்கும் சலசலப்பை ஏற்படுத்தியது.

கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்தாலும், கடன் பெற்றவர்கள் அதை திருப்பிச் செலுத்துவற்கு பொறுப்பானவர்கள். அவர்களிடம் இருந்து எப்படியாவது கடன் தொகையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடியும். அவர்கள் மீதான வழக்கை தொடரவும் வங்கிகளுக்கு உரிமை உண்டு.

தற்போது வாராக்கடன் குறைந்துவிட்டாலும், வேறு விதமான ஆபத்துகள் வர ஆரம்பித்திருக்கின்றன. தானாகவே முன் வந்து மஞ்சள் பத்திரிக்கை தந்து, தன்னை கடனாளியாக அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளும் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 94 ஆயிரம் கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள், தங்களால் கடனை கட்டமுடியவில்லை என்று மஞ்சள் கடிதம் தந்திருககிறார்கள்.

பொதுவாக கடனுக்கான வட்டியை கட்டுவதில் பலர் அலட்சியம் காட்டுகிறார்கள். 90 நாட்கள் வரை பாக்கி வைத்திருந்தால் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது.

என்னால் கட்ட முடியாது என்று வெளிப்படையாக எழுத்து மூலம் வங்கிகளுக்கு தெரிவிப்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்படிப்பட்ட நிலை இருந்ததில்லை. 38 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 15 ஆயிரம் Wilful default கணக்காளர்கள் தங்களை கடனாளி என்று அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பஞ்சாப் நேஷனல்வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளில் ஆயிரக்கணக்கான கணக்குகள் இருக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com