ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மே 11ம் தேதி உள்ளூர் விடுமுறை!

RAMANADHAPURAM
RAMANADHAPURAMsource:oneindiatamil
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங், பொது (பல்வகை) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண்.154 பொது(பல்வகை துறை நாள்:03.09.2020-ன்படி, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா ஏப்ரல் 10ஆம் தேதி பிற்பகல் தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி பிற்பகல் வரை நடைபெறுகிறது.

இதனை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு எதிர்வரும் 11.05.2026 திங்கள்கிழமை அன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 23.05.2026 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 11.05.2026 திங்கள்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை கருவூலகங்கள் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

இதனால், அரசு ஊழியர்கள் குஷியில் உள்ளனர். ஏற்கனவே, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மே மாதம் விடுமுறை இருப்பதால் இந்த விடுமுறை அரசு ஊழியர்களுக்கு பொருந்தும். மே 11ஆம் தேதி அன்றைய தினம் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை இருக்கிறது. இந்த விடுமுறை ஈடுசெய்ய மே 23ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மகளிர் உரிமை தொகையை சேமித்தால் லட்சாதிபதி ஆகலாம்? எப்படி தெரியுமா.?
RAMANADHAPURAM
logo
Kalki Online
kalkionline.com