பூட்டிக் கிடக்கும் பூங்கா. காரணம் என்ன?

பூட்டிக் கிடக்கும் பூங்கா. காரணம் என்ன?
Published on

மாங்கனி நகரான சேலம் வணிகர்களுக்கு முக்கியமான நகராக இருந்து வருகிறது .பேருந்து பயணம் மூலம் பெரும்பாலோர் வணிகம் மற்றும் பல்வேறு பணி களுக்காக இங்கு வந்து செல்கின்றனர். சேலத்தில் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் பயணிகளின் வசதிக்கேற்ப பயன்பாட்டில் உள்ளன.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் நாமக்கல், திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, ஓசூர், சிதம்பரம், கடலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள்  இயக்கப் பட்டு வருகின்றன.

இதனால் பஸ் நிலையத்தில் இரவு, பகல் என்று பாராமல் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். வரும் பயணிகள் குடும்பத்துடன்  காத்திருக்கும் சமயங்களில் அவர்கள் இளைப்பாற எவ்வித வசதியும் இல்லை .ஆனால் பேருந்து நிலைய  நடைபாதைகளில் பூக்கள்,  காலனி, செல்போன் கவர் , பழங்கள் போன்றவைகளை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் பயணிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலைமை  இருந்து வருகிறது.

ந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வெளியிலிருந்து வந்து உள்ளே செல்லும் இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வெளிப்பூங்கா மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் சிறுவர், சிறுமிகள் விளையாடுவதற்கு உபகரணங்கள், பயணிகள் பெரியவர்கள்  அமர்ந்து ஓய்வு எடுக்க இருக்கைகள் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாலை நேரங்களில் வரும் பயணிகள் நடைப்பயிற்சி செய்யும் வசதியும் உள்ளது. மேலும் பூங்காவிற்குள் மனம் புத்துணர்ச்சி பெரும் வகையில் வண்ண வண்ண பூச்செடிகளும் உள்ளன. ஆனால் பூங்கா அமைத்து ஒரு வருடம் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல மக்களுக்கு எந்த பயனும் இன்றி வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே, பசுமை வெளிப்பூங்காவை விரைந்து திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பசுமை வெளிப்பூங்கா விரைவில் வந்தால் சேலம் புதிய பேருந்து நிலையம் மேலும் மதிப்பு பெறும். வருமா?

     அரசு அதிகாரிகள் கவனிப்பார்களா ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com