லோக்சபா தேர்தல் தேதி நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு – தேர்தல் ஆணையம்!

Election
Election

லோக்சபா தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு எனத் தகவல் வெளியான நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. இந்தியாவில் மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில் அதில் 273 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கமுடியும். ஐந்தாண்டு காலம் முடிவடைந்த நிலையில் ஜூன் 16ம் தேதியுடன் லோக்சபா எம்பிகளின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது.

அந்தவகையில் லோக்சபா தேர்தலை இந்தியா  முழுவதும் அமைதியாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றது. மாநில வாரியாகப் பிரித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல் எந்தெந்த மாநிலங்களில் எத்தனைக் கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் என்றுத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான அனுப் சந்திர பாண்டே பதவிக்காலம் முடிந்து பிப்ரவரி 14ம் தேதி ஓய்வுபெற்றார். மேலும் மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் கடந்த 9ம் தேதித் தனதுப் பதவியை ராஜினாமா செய்தார்.

ஒரு தலைமை தேர்தல் குழுவில் இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருக்க வேண்டும் என்பது விதுமுறை. ஆனால் இருவருமே இல்லாததால் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் மட்டுமே உள்ளார். இதனால் சரியான நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதனையடுத்து பிரதமர் மோதி தலைமையிலான ஒரு உயர்மட்ட  குழுவினை அமைத்து ஜனாதிபதி ஒப்பந்தத்துடன் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஞானேஷ் குமார் மற்றும் எஸ் எஸ். சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்கள்:
பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு வருகை… Red Zone ஆன இடங்கள்!
Election

இந்நிலையில் இரண்டு பேரும் இன்றுப் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து லோக்சபா தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் தேர்தல் தேதியை அறிவிப்பார்.

தேர்தல் தேதி அறிவித்துவிட்டாலே  நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும். இதனால் புதிய அறிவிப்புகள், திட்டங்கள் என எவற்றையும் அறிவிக்கவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com