லோக்சபா தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி!

Edapadi palanisami
Edapadi palanisami
Published on

லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டார். மேலும் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளதையடுத்து அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாகச் செயல்படுகின்றன. திமுக கட்சியும் கூட்டணி கட்சிகளின் அறிவிப்பையும், தொகுதி பங்கீட்டையும் ஒதுக்கியது.  அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் பேச்சுவார்த்தை முடிந்தது. ஆனால் தொகுதிப் பங்கீடு குறித்து மட்டுமே நிறைவு செய்ய வேண்டியது உள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான அதிமுக மட்டுமே கூட்டணி இறுதி செய்வதில் தடுமாறியுள்ளது. இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு செய்யப்படவில்லை.

இந்தநிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தார். அதன்படி தென்சென்னை தொகுதியில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். அதேபோல் சென்னை ராயபுரம் தொகுதியில் மனோ போட்டியிடப்போகிறார்.

மேலும் சிதம்பரம் தொகுதியில் சந்திரஹாசன், மதுரையில் சரவணன், தேனி தொகுதியில் நாராயணசாமி, வடச்சென்னையில் ராயபுரம் மனோ, தென் சென்னை தொகுதியில் ஜெயவர்தன் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிடப் போகின்றனர்.

அதேபோல் காஞ்சிபுரம் தொகுதியில் ராஜசேகர், நாமக்கல் தொகுதியில் தமிழ்மணி, கரூர் தொகுதியில் கே.ஆர்.என்.தங்கவேல், கிருஷ்ணகிரி தொகுதியில் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தேர்தல் வேட்பாளர்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அரக்கோணம் தொகுதியில் விஜயன், ஆரணி தொகுதியில் கஜேந்திரன், விழுப்புரம் தொகுதியில் பாக்கியராஜ், சேலம் தொகுதியில் விக்னேஷ், நாமக்கல் தொகுதியில் தமிழ்மணி மற்றும் ஈரோட்டில் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
விதிகளை மீறிய பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு!
Edapadi palanisami

அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று சொல்லப்பட்ட நிலையில் பாமக தற்போது பாஜக கூட்டணியில் தாவிவிட்டது. அதேபோல் அதிமுக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தேமுதிக இன்னும் அதன் நிலைபாட்டைக் கூறவில்லை. தேமுதிக 5 தொகுதிகளும் 1 ராஜ்யசபா சீட்டும் கேட்ட நிலையில் எடப்பாடி 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுத் தொடங்கும் நிலையில் அதிமுக விரைவில் கூட்டணி விவகாரத்தை முடிக்க முனைப்பு காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் தற்போது புதிய தமிழக கட்சி, புரட்சி பாரதக் கட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com