லண்டன் நாடாளுமன்ற தேர்தல்: ஆளும்கட்சி படுமோசமான தோல்வியை சந்திக்குமா? சர்வே கூறுவது என்ன?

Rishi sunak
Rishi sunak

பிரிட்டன் நாட்டில் இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும்கட்சி படுமோசமான தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக சர்வே கூறுகிறது.

பிரிட்டனில் தற்போது ஆளும்கட்சி தலைவராகவும் பிரதமராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Rishi Sunak இருந்து வருகிறார். இவர் ஒரு இக்கட்டான சூழலில்தான் 2022ம் ஆண்டு பிரதமரானார். இதனையடுத்து லண்டனில் இந்தாண்டு இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

சர்வே படி எதிர்க்கட்சிகளில் ஒன்றானத் தொழிலாளர் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அந்தவகையில் தொழிலாளர் கட்சி 45 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தற்போது ஆளும்கட்சியாக இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 26 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தொழிலாளர் கட்சி கன்சர்வேட்டிவ் கட்சியை விட 19 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சர்வே ஆளும் கட்சிக்கு மிகவும் தலைவலியாகவே அமைந்துள்ளது.

பிரிட்டன் நாட்டில் மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. அதில் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் 326 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்தநிலையில் தொழிலாளர் கட்சியின் கணக்குப்படி பார்த்தால் இக்கட்சி 468 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று சர்வே கூறுகிறது. ஆனால் ரிஷி தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 100க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற வாய்ப்புள்ளது என்பதால் இந்தக் கட்சி வரலாறு காணாதத் தோல்வியை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இம்மாதம் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
Rishi sunak

இதைவிட மிகவும் மோசமான சூழல் என்னவென்றால், ரிஷி சுனக் நிற்கும் தொகுதியில் கூட அவர் வெற்றிபெற முடியுமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் அந்தத் தொகுதியில் நிற்கும் எதிர்க்கட்சிகள் ரிஷி சுனக்கை விட 2.4 சதவீத அளவுதான் பின்தங்கி இருக்கின்றன. இதனால் அந்தத் தொகுதியிலும் நிலைமை எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம் என்று கூறப்படுகிறது.

பிரிட்டன் அமைச்சரவையில் உள்ள 28 பேர் இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளனர். அதிலும் 13 பேர் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் சொந்தக் கட்சியிலேயே ரிஷி சுனக்கிற்கு எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com