தொலைந்து போன வைர மோதிரம்: 6 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்!

தொலைந்து போன வைர மோதிரம்: 6 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்!

தில்லியைச் சேர்ந்த ஒரு பெண், நொய்டாவில் ஒரு வணிக வளாகத்தில் தவறவிட்ட 70 கற்கள் பதிக்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை போலீஸார் பம்பரமாகச் சுழன்று 6 மணி நேரத்தில் கண்டுபிடித்தனர்.

தில்லியில் ஷாத்ரா பகுதியைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் தொழிலதிபரின் மனைவி, குழந்தையுடன் நொய்டாவுக்குச் சென்றார். அங்குள்ள ஒரு வணிக வளாகத்துக் சென்ற அவர், குழந்தைக்கு “டயாபர்” மாற்றுவதற்காக அங்குள்ள கழிவறைக்குச் சென்றார். அப்போது, தான் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த வைர மோதிரத்தை கழற்றி வாஷ்பேசின் மேல் வைத்துவிட்டு குழந்தைக்கு டயாபர் மாற்றினார். பின்னர் அதை மறந்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.

அந்த நேரத்தில் அதே கழிப்பறை பகுதியில் இருந்த மற்றொரு பெண், அந்த வைரமோதிரத்தை இது உங்களுடையதா? என்று கேட்டுள்ளார். ஆனால், அவர் மோதிரத்தை மறந்து வைத்தது தெரியாமல், இது என்னுடையது இல்லை என்று கூறி சென்றுவிட்டார். இதையடுத்து அந்த பெண் அந்த மோதிரத்தை எடுத்துச் சென்றுவிட்டார்.

பின்னர் இரவு 10.30 மணிக்கு வீட்டுக்குவந்த அந்த பெண் மற்றும் அவளது கணவர் இருவரும் மோதிரம் காணாமல் போயிருப்பதை உணர்ந்தனர். உடனடியாக அவசர போலீஸ் உதவி எண் 112 –ஐ தொடர்பு கொண்ட்டு வைரமோதிரம் காணாமல் போன தகவலை கூறினர்.

இதையடுத்து நொய்டா செக்டார் 20 பகுதியைச் சேர்ந்த போலீஸார், உடனடியாக அந்த பெரு வணிக வளாகத்துக்குச்

சென்றனர். போலீஸார் சென்ற நேரத்தில் வணிக வளாகம் மூடப்படும் நிலையில் இருந்தது. வாடிக்கையாளர்கள் பலரும் வெளியேறி இருந்தனர். போலீஸார் அந்த வைர மோதிரத்தை பல இடங்களிலும் தேடினர். சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தபோது ஒரு பெண் அந்த மோதிரத்தை எடுத்துச் செல்வது தெரிந்தது.

மேலும் ஒரு காட்சிப் பதிவில் அந்தப் பெண் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறுவதும் தெரியவந்தது. அந்த காரின் எண்ணை வைத்து அவர் வசிக்கும் பகுதி தில்லி கணேஷ் நகர் என்பதை போலீஸார் தெரிந்துகொண்டனர். டி.எல்.எப். வணிக வளாகத்தில் உள்ள சோதனைச்சாவடியில் இருந்த நபரும், தில்லி போலீஸாரும், அந்த பெண்ணின் வீட்டை அடைந்தனர். பின்னர் காலை 5 மணி அளவில் அந்த வைர மோதிரத்தை மீட்டனர் என்று உதவி போலீஸ் கமிஷனர் ரஜ்னீஷ் வர்மா தெரிவித்தார்.

வைரக்கற்கள் பதித்த விலைமதிப்புள்ள மோதிரத்தை கண்டுபிடிப்பது பெரிய வேலையாக இருந்தது. ஆனாலும் அதை 6 மணி நேரத்தில் போலீஸார் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர் என்றார் வர்மா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com