கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது.
கடந்த ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25/- கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குலுக்கல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்தது.
இதில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ டிரைவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்தது. ஒரே நாளில் கோடீஸ்வரரான அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. அவரும், மனைவி மற்றும் குழந்தையுடன் சேர்ந்து சேனல்களில் பேட்டியும் அளித்து வந்தார்.
பரிசு விழுந்த மறுநாள் அனுப்புக்கு வரிபிடித்தம் போக சுமார் ரூ.15 கோடியே 75 லட்சம் பணம் கிடைக்கும் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அவர் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்தார்.
அவர் பேட்டியில் பலருக்கு உதவி செய்ய போவதாக அறிவித்திருந்தார். அதையெடுத்து கேரளாவில் பல நபர்கள் இரவும் பகலுமாக உதவிகேட்டு அவரது வீட்டிற்க்கு படையெடுத்த வண்ணம் உள்ளனராம்.
கல்வி மருத்துவ உதவி கேட்டு பலரும் ஏன் சினிமா எடுக்க உதவி கேட்டு கூட பலர் தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார் அனுப்.
இதன் காரணமாக வீட்டிற்கே வராமல் தலைமறைவாக இருந்து வருவதாக வருத்தத்துடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.