
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன் படி இன்று (ஆகஸ்ட் 1) புதிய விலை பட்டியல் வெளியாகி உள்ளது.
சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் 1,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று 92.50 ரூபாய் குறைந்துள்ளது.
வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 காசுகள் குறைந்து ரூ.1,852.50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.8 உயர்த்தப்பட்டு 1,945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தமாதம் ரூ.92.50 குறைக்கப்பட்டுள்ளது.
ஓட்டல், தேநீர் கடைகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலை குறைந்தது. தக்காளி, அரிசி உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் வர்த்தக சிலிண்டர் விலை குறைந்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது.இருப்பினும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமில்லை. ரூ.1,118 என்ற விலையிலேயே தொடர்கிறது.