
நாம் வீட்டிற்கு சமையல் சிலிண்டர் புக்பண்ணும்போது முழு பணத்தையும் கட்டிவிடுவோம். அதன் பிறகு அரசு அளிக்கும் மானியத்தொகை நம்முடைய வங்கி கணக்கிற்கு வந்து விடும். ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் பெற முடியும் என்பதால் வீடுகளில் சமையல் எரிவாயுவை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துகின்றனர். எல்பிஜி அல்லது சமையல் சிலிண்டர்களுக்கான மானியம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் திடீரென அந்த மானியப் பணம் வருவது நின்று விடும். ஒரு சிலருக்கு தங்களுடைய சமையல் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? இல்லையே? என்பதே தெரிவதில்லை. சிலர், அரசு சிலிண்டர் மானியத்தை நிறுத்திவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் எது உண்மை என்று தெரியாமல் நமக்கும் ஒரே குழப்பமா இருக்கும். இந்த குழப்பத்திற்கு உங்க கேஸ் கணக்ஷனுடன் உங்களுடைய ஆதார் கார்டை இணைக்காமல் இருப்பது தான் முக்கிய காரணம்.
அதாவது அந்தந்த மாநில அரசு எப்போதும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் தான் மானியத்தை செலுத்தும். அந்தவகையில் உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு இப்போது இயக்கத்தில் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அதேபோல் முதன்முதலில் சிலிண்டர் வாங்கும்போது உங்கள் குடும்பத்தின் உடைய ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் நீங்க அரசாங்க மானியம் பெற முடியாது. ஆனால் அதற்கு உங்களுடைய கேஸ் கணக்ஷனை ஆதருடன் இணைக்க வேண்டியது கட்டாயம்.
ஒருவேளை உங்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருந்து, அதில் எந்த வங்கி கணக்கு எண்ணுக்கு மானியம் செல்கிறது என தெரியாமல் இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணுக்கு மானியம் வர வேண்டும் என நீங்கள் விரும்பினாலோ அதனை ஆன்லைன் மூலமாகவே அதை நீங்கள் சரிபார்க்கலாம்.
சிலிண்டர் மானியம் மட்டுமல்ல, அரசு வழங்கும் மற்ற எந்த மானியமாக இருந்தாலும் அது உங்களுடைய அக்கவுண்டுக்கு சரியாக வர நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்று இங்கே விலாவரியாக பார்த்து தெரிந்து கொள்வோம்.
அந்த வகையில் நீங்கள் வாங்கும் சிலிண்டருக்கான மானியம் வரவில்லை என்றால், www.mylpg.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் ஆகிய மூன்று எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இருக்கும்.
அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தவுடன் புதிய துணைப்பக்கம் ஒன்று திறக்கும். பார் மெனுவுக்குச் சென்று ‘Give your feedback online’என்பதைக் கிளிக் செய்யவும்.
அதில், கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் கொடுத்த உங்களுடைய மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் தகவல்களை ஒவ்வொன்றாக தவறு இல்லாமல் நிரப்பவும்.
இதற்குப் பிறகு, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் ‘Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ என்பதை கிளிக் செய்தால், உங்கள் மானியம் தொடர்பான அனைத்து விவரங்களும் திரையில் தோன்றும். மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா இல்லையா என்பதை அதில் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
நீங்கள் மானியம் பெறவில்லை என்றால், அங்கேயே உங்களுடைய புகாரை பதிவு செய்யலாம். அல்லது pgportal.gov.in என்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தளத்திலும் உங்களுடைய புகாரை பதிவு செய்யலாம்.
வாடிக்கையாளர்கள் கேஸ் சிலிண்டர் மானியத்துடன் ஆதார் இணைப்பு மற்றும் e-KYC போன்ற விவரங்களை சரியான நேரத்தில் புதுப்பிப்பதன் மூலம் உங்களுடைய கேஸ் சிலிண்டர் மானியம் எந்த சிக்கலும் இல்லாமல் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை மறக்க வேண்டாம்.