

லக்னோவில் இன்று நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
லக்னோ அணி 9 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்றுள்ள லக்னோ அணி இந்த போட்டியில் தோற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற இயலாது.
பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியில் 12 புள்ளிகளை பெற்றுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் பெங்களூருவும், 2-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய லக்னோ அணி 20 ஒவர் முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது.
இதற்கிடையே 9 ஓவர்கள் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மழை விட்டதும் பந்து வீச்சு 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பெங்களூரு அணி லக்னோவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் லக்னோ அணி 3-வது வெற்றியை பதிவு செய்ததுடன், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.