சந்திர கிரகணம் வெறும் கண்களால் பார்க்கலாமா?

இன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் !
சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்
Published on

இன்று சந்திரகிரகணம் பிற்பகலில் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் சுமார் 20 நிமிடத்துக்கு நீடிக்கும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இது . பொதுவாக சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்பது விஞ்ஞானிகள் கருத்து .

இந்திய நேரப்படி, இன்று மதியம் 2.39 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு கிரகணம் 3.46 மணிக்கு தொடங்கி 5.12 மணிக்கு நிறைவடைய உள்ளது. சென்னையை பொறுத்தவரை சந்திரன் உதயத்தின்போது முழு சந்திர கிரகணமும் அது முடிந்த பிறகு பகுதி நேர கிரகணமும் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

இந்த சந்திர கிரகணம் சுமார் 40 நிமிடம் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பிறகே அடுத்த முழு சந்திர கிரகணம் ஏற்படும் என்றும் பகுதி நேர சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்திர கிரகணம் என்பது என்ன? அது பற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது என்ன என்று பார்க்கலாம்.

சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது ஏற்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து பூமியால் நிலவு மறைக்கப்படும் போது இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது.அப்போது, சந்திரன் முழுமையாக மறைக்கப்படும் பட்சத்தில் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் தாராளமாக பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com