இன்று  பிறந்தநாள் கொண்டாடும் "மதுராந்தகர்" நடிகர் ரஹ்மான்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் "மதுராந்தகர்" நடிகர் ரஹ்மான்!

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் கதாநாயகனாக வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ரஹ்மான். சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அவர் மதுராந்தகன் கேரக்டரில் அருமையாக நடித்திருந்தார். பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகர் ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ரகுமான். 1986 ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய " நிலவே மலரே" என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கடந்த 80களில் அறிமுகம் ஆகி பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ரகுமான். ’வசந்த ராகம்’ ’புரியாத புதிர்’ புதுப்புது அர்த்தங்கள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். சூர்யா நடித்த ’சிங்கம்’ அஜித் நடித்த ’பில்லா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்த உள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள நடிகர் ரகுமான், கே பாலசந்தரின் ‘காதல் பகடை’ உள்ளிட்ட ஒரு சில தொலைக்காட்சி சீரியலில் நடித்துள்ளார். இவருக்கென பெண் ரசிகர்களும் ஏராளம்.

இவர் 1984ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 16 மலையாள படங்களில் நடித்து அசத்தினார். பிறகு ரகுமான் அவர்கள் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் மற்றும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழில் இவர் நிலவே மலரே, புரியாத புதிர், புதுப்புது அர்த்தங்கள், புதிய ராகம், சங்கமம், வாமனன், பில்லா-2, துருவங்கள் பதினாறு என அன்றிலிருந்து இன்று வரை பல ஹிட் படங்களில் நடித்தார் ரகுமான்.

சினிமாவில் தன்னைக்கென தனி இடங்களை பிடித்திருக்கும் நடிகர் ரஹ்மான், தற்போதும் கைவசம் கைநிறைய படங்களை வைத்துள்ளார் . தமிழில், ரவி சந்திரா இயக்கும் 'அஞ்சாமை ' ,

கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார், அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் ' நிறங்கள் மூன்று ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் ரஹ்மான் கதா நாயகனாக நடிக்க, அமல் K ஜோப் இயக்கும் 'ஏதிரே ', சார்ல்ஸ் இயக்கும் 'சமாரா' மற்றும் ஹிந்தியில் ரஹ்மான் அறிமுகமாகும் பிரம்மாண்ட படம் 'கண்பத் ' .' குயின் ' புகழ் விகாஸ் பால் இயக்கும் இப்படத்தில் ரஹ்மானும், டைகர் ஷார்ஃபும் அமிதாப் பச்சனின் பிள்ளைகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. ரஹ்மான் கதா நாயகனாக நடிக்கும் முதல் வெப் சீரீசை டிஸ்னி ஹாட் ஸ்டாருக்காக பிரபல மலையாள நிறுவனமான ஆகஸ்ட் சினிமாஸ் தயாரிக்கிறது. நஜீம் கோயா இதனை இயக்குகிறார். '1000 பேபீஸ் ' என்று பெயர் சூட்ட பட்டுள்ள இந்த வெப் சீரீஸின் படப்பிடிப்பு வரும் மே மாதம் 1- ம் தேதி கொச்சியில் துவங்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com