ஆடி அமாவாசை... மதுரையில் தாறுமாறாக எகிறியது பூக்கள் விலை!

ஆடி அமாவாசை... மதுரையில் தாறுமாறாக எகிறியது பூக்கள் விலை!
Published on

ஆடி அமாவாசையையொட்டி மதுரையில் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இன்று சோமாவதி அமாவாசையையொட்டி மக்கள் புனித நதிகளில் நீராடி, முன்னோர்களுக்கு தில தர்ப்பணம், அதாவது எள்ளும் நீரும் கொடுப்பது பித்ருக்களை சாந்திப்படுத்தும். அமாவாசை தினத்தன்று மௌன விரதம் கடைபிடிப்பதால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என மத்ஸ்ய புராணத்திலும் சோமவதி அமாவாசையின் மகத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோமவதி அமாவாசை தினத்தில் புனித நதிகளில் நீராடினால் செல்வச் செழிப்புடனும், நோய்களற்றவர்களாகவும், துக்கம் மற்றும் துக்கங்களிலிருந்து விடுபடுவார்கள் என்று சோமவதி அமாவாசையின் முக்கியத்துவம் பற்றி மகாபாரதத்தில் பீஷ்மர் தர்மருக்கு கூறியுள்ளார்.

சோமவார அமாவாசை விரதத்தை தம்பதிகள் இணைந்து இருப்பது சிறப்பானது. இதனால் தம்பதியர்கள் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடும் ஒற்றுமையோடும் இருப்பார்கள்.

மல்லிகை பூவிற்கு பெயர் போன மதுரையில் விஷேச நாட்களில் பூக்கள் விலை கிடுகிடுவென உயரும். அந்த வகையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் பூக்கள், மாலை வாங்குவார்கள். இதனால் பூக்கள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பலர் மதுரை வந்து தான் ராமநாதபுரம் செல்வார்கள். அதனால் பலரும் மதுரையிலேயெ பூக்கள், மாலையை வாங்கி செல்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகை 500 ரூபாய்க்கும், ஒரு கிலோ பிச்சி, முல்லை பூ ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சற்று அதிர்ச்சியடைந்தாலும் கூட வழிபாட்டிற்காக வாங்கி செல்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com