மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலத்திற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல்!

மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலத்திற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல்!
Published on

சென்னை மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க நிபந்தனைகளுடன் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.5800 கோடியில் மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த இத்திட்டம் நிறைவேறுவதில் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 19 கிலோமீட்டர் தூரத்தில் உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டு கனவாக இருந்து வருகிறது. கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி விரைவாக துறைமுகத்திற்கு சென்று வர முடியும். 

பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோரால் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, 1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. 15.சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. இந்த காலகட்டத்தில் துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் முடங்கியது. பல்வேறு காரணங்களால் பணிகள் நடைபெறவில்லை.

 மதுரவாயல் , கோயம்பேடு, அரும்பாக்கம் ,நுங்கம்பாக்கம் , அமைந்தகரை , எழும்பூர் ,  சிந்தாதிரிப்பேட்டை வழியாக மேம்பாலம் துறைமுகத்தை சென்றடையும்  என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக ஆட்சியில் திட்டம் தடை செய்யப்பட்ட நிலையில்,  கூடுதல் நிதி மற்றும் செயல் திட்டங்களின் மூலம் மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது . இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையெழுத்தானது.  அதன்படி சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான ஈரடுக்கு மேம்பால திட்டத்திற்கு கடலோர மண்டல மேலாண்மை அனுமதி வழங்க மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் சென்னை மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு பாலம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியது. 20.56 கிலோ மீட்ட தூரத்திற்கு 4 வழி சாலையாக சென்னை மதுரவாயல் உயர்மட்ட பாலம் அமைக்க நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  

உயர்மட்ட பாலத்திற்காக எழுப்பப்படும் பில்லர்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்திற்கு தடை ஏற்படக் கூடாது என்றும் பாலம் அமைக்க தற்காலிகமாக அமைக்கப்படும் கட்டமைப்பு பணிகள் முடிந்த ஒரு மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என்றும் நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.  

கட்டுமானத்தின் போது அகற்றப்படும் கழிவுகளை நீர்நிலையிலோ அல்லது அதற்கு அருகிலோ கொட்ட கூடாது என்றும் நிபந்தனை விதித்து இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி மத்திய அரசுக்கு சுற்றுச்சூழல் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.  

ரூ.5 800 கோடியில் துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட பறக்கும் மேம்பால திட்டம் செயல்படுத்த உள்ளது.

இதற்கான பணிகள்  விரைவில் தொடங்கப்பட்டு  அடுத்த 30  மாதத்திற்குள்முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com