

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம், அம்மாநிலத்தில் உள்ள பாராமதி விமான நிலையத்தில் இன்று (ஜன.28) காலை தரையிறங்கும் விழுந்து விபத்துக்குள்ளானது.
அஜித் பவார் இன்று ஒரு நிகழ்ச்சிக்காக பாராமதி நகருக்கு சிறிய ரக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது விமானம் பாராமதியிலே தரையிறங்கும் போது எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகியது.இதில் விமானம் தீப்பற்றி எரிந்தது. அஜித்பவார் உள்ளிட்ட பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அஜித் பவார், அவரது உதவியாளர்கள் இருவர் உள்ளிட்ட 6 பேர் இந்த கோர விபத்தில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது