ஷிண்டே-அஜித்பவார்
ஷிண்டே-அஜித்பவார்

மகாராஷ்டிரம்:ஷிண்டே-அஜித்பவார் மோதல்!

காராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், துணை முதல்வர் அஜித் பவாருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகவும், நிதி ஒதுக்கீடுகளை குறைத்துவிட்டதாகவும் அஜித் பவார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஷிண்டேயுடன் மோதல் முற்றியுள்ள நிலையில் துணை முதல்வர் அஜித் பவார், சமீபத்தில் மற்றொரு துணை முதல்வர் தேவேந்திர அஜித்பவார் கலந்து கொள்ளாமல், உடல்நிலையைக் காரணம்காட்டி தவிர்த்துவிட்டாராம்.

கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட துறை சம்பந்தமான கூட்டங்களை நடத்த வேண்டாம் என அஜித் பவாரிடம், முதல்வர் ஷிண்டே கண்டிப்புடன் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சில துறைகள் தொடர்பான விஷயங்களில் தலையிடவேண்டாம் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு தொடர்பான கோப்புகளை நேரடியாக தமக்கு அனுப்பாமல், முதலில் தேவேந்திர பட்னவிஸுக்கு அனுப்பி பூர்வாங்க ஒப்புதல் பெற்று பின்னர் இறுதி ஒப்புதலுக்கு அனுப்புமாறு அஜித்பவாரிடம் முதல்வர் ஷிண்டே தெளிவாக கூறிவிட்டாராம்.

இதனால் தனது சுதந்திரம் பறிக்கப்பட்டது போல் உணர்கிறார் அஜித்பவார். உத்தவர் தாக்கரே முதல்வராக இருந்தபோதுகூட எங்களது செயல்பாட்டில் அவர் தலையிட்டது இல்லை. ஆனால், ஷிண்டே தேவையில்லாமல் எங்கள் விஷயத்தில் தலையிடுகிறார். அதிகாரத்தை குறைக்க முயல்கிறார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பிரிவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் குறைபட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மூன்று கூட்டணி கட்சிகளுக்கு அரசு நிதியை ஒதுக்குவதிலும் ஷிண்டே பாரபட்சமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பா.ஜ.க. மற்றும் சிவசேனை எம்.எல்.ஏ.க்களுக்கு அதிக அதிகாரமும் நிதியும் வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்னைக்கு பா.ஜ.க. தலைமை தீர்வுகாண வேண்டும். உறுதியளித்தபடி அனைத்து கூட்டணி கட்சியினருக்கும் ஒரே மாதிரியான அதிகாரம் மற்றும் நிதி ஒதுக்கீடு வேண்டும் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான  விஜய் வடேட்டிவார் கூறுகையில், “தான் நினைத்தது நடக்கவில்லை என்றால் அதிருப்தியை வெளிப்படுத்துவது அஜித்பவாரின் வாடிக்கை. உத்தவ் முதல்வராக இருந்தபோது அஜித்பவார், தன்னையே முதல்வராக நினைத்துக் கொண்டு செயல்பட்டார். தானே அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டார். ஆனால், இப்போதைய முதல்வர் ஷிண்டே, அதற்கு கிடுக்கிபிடி போட்டதுதான் மோதலுக்கு காரணம் என்றார்.

இந்தச் சூழ்நிலையில், துணை முதல்வர் அஜித்பவார், தனது கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்,ஏ.க்களின் கூட்டத்தை வருகிற 21 ஆம் தேதி நடத்தி தற்போதைய அரசியல் நிலவரத்தை விவாதிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com