MAHE போதைப்பொருள் காரணமாக 42 மாணவர்கள் இடைநீக்கம்!

MAHE போதைப்பொருள் காரணமாக 42 மாணவர்கள் இடைநீக்கம்!

உடுப்பி: மாஹே, மணிபாலில் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து உள் விசாரணை நடந்து வரும் நிலையில், கல்லூரியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 42 மாணவர்களை ஒரு மாத காலத்திற்கு நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது. இந்த 42 மாணவர்கள் மீது சமீபத்தில் சட்டவிரோத போதைப்பொருள் உட்கொண்டதற்காக மணிபால் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர், அதைத் தொடர்ந்து MAHE நிர்வாகம் அவர்களை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது.

சமீப காலமாக சட்டவிரோத போதைப்பொருள் நுகர்வு வழக்குகள் ஆங்காங்கே பதிவாகி வந்த போதிலும், குறிப்பாக மணிப்பால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வானது திடீரென அதிகரித்திருப்பது தெரிய வந்தது. இதில்,பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாணவர்களில் பலரும் அச்சுறுத்தலுக்கு பலியாகி இந்த போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர், என்பதை அறிந்ததும்... படிக்கும் மாணவர்களை இது போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிமைகளாக்கத் தூண்டும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க போலீஸார் தூண்டப்பட்டனர்.சில மாதங்களுக்கு முன்பு உடுப்பியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மணிப்பாலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் மூத்த குடிமகன் ஒருவர், தனது அண்டை வீட்டில் வசிக்கும் மாணவர்களில் சிலருக்கு போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கம் உண்டென போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார்.

இப்படி பரவலாக MAHE முழுதும் ஒரு சில மாணவர்கள் போதைப்பொருளுக்கு இரையாகியிருப்பதை அவதானித்ததாக அந்த வட்டாரத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்றிலும் தகவல் வெளியாகி இருந்தது. மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் "இந்த மாணவர்கள் MAHE இன் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையின்படி உள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உள்ளக விசாரணை முடியும் வரை அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,' என்று கல்லூரி வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

அந்த மாணவர்கள் இப்போது உதவிக்காக MAHE மாணவர் ஆலோசகரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. உடுப்பி எஸ்பி அக்ஷய் எம் ஹகே கூறுகையில், கடந்த மூன்று மாதங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வுகளில் ஈடுபட்ட மாணவர்களின் நார்கோ-அனாலிசிஸ் சோதனை முடிவுகள் சாதகமாக வந்ததையடுத்து, மாஹே நிறுவனத்திடம் ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டது, அதன் அடிப்படையில், MAHE அவர்களை இடைநீக்கம் செய்ததாக அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com