தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் பங்கேற்க இயலாமல் போனதற்கு பள்ளிக்கல்வி துறையின் அலட்சியமே காரணம் என பலதரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடப்பாண்டு தமிழக அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் விளையாட்டுப் பிரிவில் மதிப்பெண் பெறும் வாய்ப்பை தமிழக மாணவர்கள் இழந்துள்ளனர். இத்தகைய தவறுகள் இனி நடைபெறாதவாறு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்’’ என்றார்.
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தால் உலக அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருக்கும் எனவும், முறையான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தினால் தகுதி இருந்தும் வாய்ப்பை இழந்து விட்டதாக மாணவ மாணவிகள் வருத்தத்தில் உள்ளனர்
இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
தேசிய அளவிலான போட்டிகள் குறித்து முறையான தகவல் வரவில்லை என்று கூறிய அவர், 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இந்த போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய அளவிலான போட்டிகளுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் அனுப்பப்படாத விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கவனக்குறைவாக இருந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் பங்கேற்க இயலாமல் போனதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர்ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.