பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்!

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்!
Published on

பெண்களுக்கென பிரத்யேக நீண்டகால சேமிப்பு திட்டங்கள் பல உள்ள நிலையில் குறைந்த நேரத்தில் சேமிப்பதற்காக மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அதில் பெண்களுக்கான சிறுசேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் குறித்து அறிவித்தார். நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை நினைவு கூரும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கென பிரத்யேக சிறுசேமிப்புதிட்டமான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தினை அறிமுகப்படுத்தியிருந்தார்.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் மட்டுமல்லாது பெண்கள் தங்கள் பேரில் கூட அதிகபட்ச தொகையாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பெண்கள் அல்லது சிறுமியர் பெயரில் ரூ.2 லட்சம் வரை 2 ஆண்டு காலத்திற்கு டெபாசிட் செய்யலாம்.

இதற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இது வங்கிகளுடன் ஒப்பிடுகையில் நல்ல வட்டி ஆகும். இந்தத் திட்டத்தில் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம்டெபாசிட் செய்தால், முதல் ஆண்டு ரூ.15,427ம் இரண்டாம் ஆண்டும் அதேவட்டியும் கிடையும்.

ஆக நீங்கள் செய்த முதலீடு இரண்டே ஆண்டுகளில் ரூ.2.32 லட்சமாக பெருகி விடும்.

இந்தத் திட்டத்தில் முழுவதும் வரி விலக்கு அளிக்கப்படுமா? அல்லது வட்டிக்கு வரிபிடித்தம் உண்டா? என்பன போன்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. இருப்பினும் இத்திட்டத்துக்கு வரி விலக்கு கிடைக்கும் என்றே பலரும் நினைக்கின்றனர்.

இந்தத் திட்டம் ஒவ்வொரு அஞ்சல் அலுவலகங்களிலும் குறிப்பிட்ட நாள்களுக்கு கிடைக்கும். இத்திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்குகிறது.

முதலீட்டாளர்கள், பெண்கள், சிறுமிகள் பெயரில் முதலீடு செய்து நல்ல பண பலனைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com