"விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு முதல் வரவேற்பு என்னுடையது தான்" - கமல்!

Kamal Haasan
Kamal Haasan

விஜய்யை அரசியலுக்கு வரேன் என்று சொன்னபோது அவருக்கு முதல் வரவேற்பு என்னுடையதாக தான் இருந்தது என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கி மதுரையில் தனது கட்சி பெயரை அறிவித்தார். இந்த நிலையில் இந்த கட்சி தொடங்கி 6 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று 7ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இறுதியானதும் நல்ல செய்தி சொல்கிறேன். சினிமாவை விட்டு முழுநேர அரசியலில் இறங்குவது விஜய்யின் இஷ்டம். அவர் செய்கிற அரசியல் அவர் பாணி. நான் செய்கிற சினிமா என் பாணி. அவரவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்துகொண்டிருக்கிறோம். விஜய்யுடன் ஏற்கனவே நான் பேசியிருக்கிறேன். அரசியலுக்கு வரவேண்டும் என்று விஜய் சொன்னதும் முதல் வரவேற்பு என்னுடையதாக தான் இருந்தது.

இதையும் படியுங்கள்:
நடிகை வித்யா பாலன் பெயரில் போலி கணக்கு பயன்படுத்தி பணம் பறிப்பு!
Kamal Haasan

இந்திய கூட்டணி உடன் இணைவது குறித்து பேசிய கமல், கட்சி அரசியலை மழுங்கடித்து தேசத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். தேசத்தைப் பற்றி சுயநலமில்லாமல் சிந்திக்கும் எவருடனும், எனது மக்கள் நீதி மய்யமும் துணை நிற்கும். ஆனால், நீங்கள் உள்ளூர் அரசியல் நடத்தினால் நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம். கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேனா என்பதை கூட்டணி பேசி முடித்துவிட்டு சொல்கிறேன் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com