தேசியத் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தின் ஆசீயினை பெற்ற மல்லிகார்ஜுன் கார்கே போட்டியிடுகிறார் என்பது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது. அவருக்கும் லோக்சபா எம்.பி., சசி தரூருக்கும் இடையே கடும் போட்டி இருப்பதால் அக்டோபர் 19ம் தேதி தான் முறையாக முடிவு தெரியவரும்.
அசோக் கெலோட் காங்கிரஸ் தலைமைக்கு போட்டியிடாத நிலையில் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு வெற்றிவாய்ப்பு அதிகமிருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கர்நாடக முதல்வர் பதவிக்கான போட்டியில் மூன்று முறை தோல்வியடைந்த மல்லிகார்ஜுன் கார்கே, இப்போது காங்கிரஸைத் தலைமையேற்கத் தயாராகிவிட்டார்.
ஆனால் காங்கிரஸ் தலைவர் என்கிற மிக பெரிய பரிசு கார்கேவிற்கு காத்திருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. தேசியத் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தின் ஆசீர்வாதம் அவருக்குப் பக்கபலமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.