ராகுல்காந்தி பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்: அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்!

RahulGandhi
RahulGandhi

ஸ்ஸாமில் பாரத் ஜடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் ஸ்ஸகட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு கார்கே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 14-ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தெளபால் நகரில் இருந்து பாரத் ஜடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். யாத்திரையின் 10-வது நாளான நேற்று அஸ்ஸாமின், குவாஹாட்டி நகருக்கு அவர் பாத யாத்திரையாக சென்றார். சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் அவருடன் சென்றனர்.

அப்போது குவாஹாட்டி நகருக்குள் ராகுல் காந்தி நுழைய அஸ்ஸாம் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை காங்கிரஸார் அகற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்நிலையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வா சர்மா,  எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அஸ்ஸாம் மிகவும் அமைதியான மாநிலம். நக்சலைட் அணுகுமுறை எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரானது. ராகுல் காந்தி மக்களைத் தூண்டி விடுகிறார். வன்முறை தொடர்பான வீடியோவை காங்கிரஸாரே வெளியிட்டு உள்ளனர்.

இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து ராகுல் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய அஸ்ஸாம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். மக்களவைத் தேர்தலுக்குப் பின் அவர் கைது செய்யப்படலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சூழலில், புதன்கிழமை (ஜன.24) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே எழுதியுள்ள கடிதத்தில், அத்து மீறல்களை கண்டு கொள்ளாமல் துணை நிற்கின்றனர். ராகுலுக்கும் அவருடைய குழுவினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.

அஸ்ஸாமில் யாத்திரையின் முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் பல்வேறு இடையூறுகள் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இடையூறுகளுக்கு மத்தியிலும் ராகுல் காந்தி திட்டமிட்டபடி யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அதனால் நீங்கள் தலையிட்டு அஸ்ஸாம் முதல்வரும், காவல்துறை டிஜிபியும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும்.

ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து ராகுல் காந்திக்கு தனிப்பட்ட முறையில் பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் இதில் தலையிட்டு அவருடைய, யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் ராகுல் காந்தி தனது 11-வது நாள் யாத்திரையை அஸ்ஸாமின் பார்பேடாவில் தொடங்கியுள்ளார். போங்கைகான் செல்லும் அவர் துப்ரியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com